/indian-express-tamil/media/media_files/2sk22qrhDQ1jjtFt4noz.jpg)
டி.என்.பி.எஸ்.சி செயலாளர் உமா மகேஸ்வரி மாற்றம் செய்யப்பட்டுளார்.
டி.என்.பி.எஸ்.சி செயலாளர் உமா மகேஸ்வரி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடைமுறைகள் தாமதம் ஆகுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
டி.என்.பி.எஸ்.சி செயலாளராக 2 ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த உமா மகேஸ்வரி வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி செயலாளராக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் இருந்த உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ் இடமாற்றம் செய்யப்பட்டு, வணிகவரித்துறை இணை ஆணையராக நியமித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே, கடந்த ஓராண்டுக்கும் மேலாக டி.என்.பி.எஸ்சி தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில், தற்போது டி.என்.பி.எஸ்.சி செயலாளர் உமாமகேஸ்வரியும் மாற்றப்பட்டுள்ளார். டி.என்.பி.எஸ்.சி செயலாளராக இருந்த உமா மகேஸ்வரி டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் சார்ந்த பல்வேறு முக்கிய பணிகளை வந்தார்.
டி.என்.பி.எஸ்.சி செயலாளராக இருந்த உமா மகேஸ்வரி மாற்றம் செய்யப்பட்ட பின், டி.என்.பி.எஸ்சி செயலாளராக இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை. அடுத்த டி.என்.பி.எஸ்.சி செயலாளர் யார் என்ற அறிவிப்பு விரைவில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி.என்.பி.எஸ்.சி அறிவிக்கும் குரூப் 1, 2, 4, உள்ளிட்ட அரசு பணிகளுக்கான தேர்வுகளை ஆண்டு தோறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் எழுதி வருகின்றனர். தேர்வுகள் அறிவிப்பு, தேர்வு நடத்தும் பணிகள், தேர்வு முடிவுகள் என ஆண்டு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி பணிகள் இருக்கும். இந்நிலையில், திடீரென டி.என்.பி.எஸ்.சி செயலாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதங்கள் ஏற்படலாம் என தேர்வர்கள் கவலை அடைந்துள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டி.என்.பி.எஸ்.சி செயலாளர் மாற்றப்பட்டு, அந்த பதவி காலியாக இருப்பதால் குருப் 2 தேர்வு முடிவுகள் தாமதமாகுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளதால் தேர்வர்கள் கவலை அடைந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.