டிஎன்பிஎஸ்சி தேர்வில் மொழிபெயர்ப்பு தவறு: கண்டறிவதில் சிக்கல்- அதிகாரிகள் முக்கிய ஆலோசனை

வினாத்தாள் கசிவு, கான்ஃப்டின்ஷியல் போன்ற காரணங்களால் யார் மொழிபெயர்த்தது என்ற விவரம் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுக்கே கண்டறிய முடியாததால் இந்த விவகாரம் மேலும் சிக்கல் ஆகியுள்ளது.

வினாத்தாள் கசிவு, கான்ஃப்டின்ஷியல் போன்ற காரணங்களால் யார் மொழிபெயர்த்தது என்ற விவரம் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுக்கே கண்டறிய முடியாததால் இந்த விவகாரம் மேலும் சிக்கல் ஆகியுள்ளது.

author-image
WebDesk
New Update
tnpsc head

TNPSC translation error Ayya Vaikundar Makkalai Thedi Maruthuvam scheme

தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) நடந்த இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில், அய்யா வைகுண்டர் குறித்த கேள்வியின் ஆங்கில மொழிபெயர்ப்பில், முடிசூடும் பெருமாள் என்ற அய்யா வைகுண்டரின் பெயரை, "the god of hair cutting" என்று மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. இது அய்யா வைகுண்டரின் பக்தர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Advertisment

அதேபோல மற்றொரு கேள்வியில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சரியான கூற்றுகளை கண்டறியவும் என கேள்விக்கு, '2024 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து விருதை பெற்றது' என்பதை, "It Begged the United Nations award" - பிச்சை எடுத்தார்கள் என்று மொழிபெயர்க்கப்பட்டிருந்து. இந்த இரண்டு தவறுகளும் வினாத்தாள் தயாரிப்பு குழுவின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்க வழிவகுத்தன.

டி.என்.பி.எஸ்.சி-யின் விளக்கம்:

இந்த சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களுக்கு பிறகு, டி.என்.பி.எஸ்.சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் இந்த இரண்டு கேள்விகளுக்கும் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும், இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.

இந்நிலையில் மொழிபெயர்ப்பு தவறு எப்படி நடந்தது என்பது குறித்து தற்போது டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். வினாத்தாள் கசிவு, கான்ஃப்டின்ஷியல் போன்ற காரணங்களால் யார் மொழிபெயர்த்தது என்ற விவரம் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுக்கே கண்டறிய முடியாததால் இந்த விவகாரம் மேலும் சிக்கல் ஆகியுள்ளது. 

Tnpsc

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: