பெண் பட்டதாரிகளா நீங்க.... அரசு வேலை காத்திருக்கு...உடனே விண்ணப்பியுங்க

TNPSC : சமூகநலத்துறையில் காலியாக உள்ள துணை இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாடு திட்ட அலுவலர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன

சமூகநலத்துறையில் காலியாக உள்ள துணை இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாடு திட்ட அலுவலர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிகளுக்கு தகுதியுள்ள பெண் முதுகலை பட்டதாரிகள் உடனே விண்ணப்பிக்குமாறு டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

காலிப்பணியிடங்கள் – 102

துணை இயக்குனர் – 13 பணியிடங்கள்

சம்பளம் – ரூ. 56100-177500

கல்வித்தகுதி – ஹோம் சயின்ஸ், சைக்காலஜி, சோசியாலஜி, உணவு , ஊட்டச்சத்து உள்ளிட்ட துறைகளில் முதுகலை படிப்பில் தேர்ச்சி

வயது வரம்பு : எஸ்.சி. எஸ்.டி. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட – வயது வரம்பு இல்லை
வகுப்பு, அனைத்து பிரிவுகளிலும் உள்ள விதவைகள்
இதர வகுப்பினர் – அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

குழந்தைகள் மேம்பாடு திட்ட அலுவலர் – 87 பணியிடங்கள்

சம்பளம் – ரூ. 36900-116600

கல்வித்தகுதி : ஹோம் சயின்ஸ் அல்லது நியூட்ரிசன் பிரிவில் பட்டப்படிப்பில் தேர்ச்சி

வயது வரம்பு ; எஸ்.சி. எஸ்.டி. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு, அனைத்து பிரிவுகளிலும் உள்ள விதவைகள் – வயது வரம்பு இல்லை
இதர வகுப்பினர் – அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதிவுக்கட்டணம் – ரூ.150

தேர்வுக்கட்டணம் – ரூ .200

முக்கிய தேதிகள்

பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியான நாள் – ஆகஸ்ட் 13, 2019
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி – செப்டம்பர் 11, 2019
கட்டணம் செலுத்த கடைசி தேதி – செப்டம்பர் 13, 2019
தேர்வு நாட்கள் – நவம்பர் 16 மற்றும் 17

இந்த பணியிடங்கள் குறித்த மேலதிக தகவல்களுக்கு //tnpsc.gov.in/Notifications/2019_24_Assistant_Director_CDPO.pdf இந்த இணையதள பக்கத்தை காணவும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close