Advertisment

TNSAMB; தமிழ்நாடு அரசு வேலை; 10-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்!

தமிழ்நாடு வேளாண் சந்தைப்படுத்துதல் வாரியம் வேலைவாய்ப்பு; பத்தாம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழக அரசு வேலை; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

TNSAMB invites application for various posts: தமிழக அரசின் மாநில வேளாண் சந்தைப்படுத்துதல் வாரியம், சிறப்பு முருங்கை ஏற்றுமதி வசதி மையத்தில், அலுவலக உதவியாளர், தரவு உள்ளீடு இயக்குனர், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.03.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (Technical Coordinator)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : B.Sc Agri with MBA படித்திருக்க வேண்டும். மற்றும் 5 – 10 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

தரவு உள்ளீடு இயக்குனர் (Data Entry Operator)

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி : B.Sc Computer Science or BCA. மற்றும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

அலுவலக உதவியாளர் (Office Assitant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்: பழனி முருகன் கோயில் வேலைவாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித்தகுதி போதும்!

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : Chief Executive Officer, Tamilnadu State Agricultural Marketing Board, CIPET road, Thiru.Vi.Ka Industrial Estate, Guindy, Chennai - 32

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.03.2022

publive-image

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment