Advertisment

ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tn govt jobs

அரசு வேலைவாய்ப்பு

தமிழக அரசின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (TNSRLM) நீலகிரி மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 28.08.2023 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Advertisment

இதையும் படியுங்கள்: காரைக்குடி சிக்ரி வேலை வாய்ப்பு; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

வட்டார ஒருங்கிணைப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் சமர்பிக்க வேண்டும்.

முகவரி: இணை இயக்குனர்/ திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், 1பி பிளாக், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பிங்கர் போஸ்ட், உதகை, நீலகிரி – 643005.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.08.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s339461a19e9eddfb385ea76b26521ea48/uploads/2023/08/2023082233.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment