தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வந்தாச்சு அருமையான வேலைவாய்ப்பு. தேர்வு கிடையாது. எனவே, 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 3274 ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் பிற அரசு போக்குவரத்துக் கழகங்களில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஓட்டுநர் உடன் நடத்துநர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 3274
மண்டலம் வாரியான காலியிட விவரம்
மாநகர போக்குவரத்துக் கழகம், சென்னை – 364
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், சென்னை – 314
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் - 322
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் – 756
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் – 486
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோயம்புத்தூர் – 344
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை – 322
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி - 362
கல்வித் தகுதி: டிரைவர் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். நடத்துனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 24 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின் படி பி.சி, எம்.பி.சி டி.என்.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகுதிகள்:
1. தமிழ்நாட்டில் செல்லுபடியாகும் பப்ளிக் சர்வீஸ் பேட்ஜ்
2. அடிப்படை முதலுதவி சான்றிதழ்
3. 160 செ.மீ குறைவில்லாத உயரம்
4. குறைந்தபட்ச எடை 50 கிமீ
5. நல்ல கண்பார்வை மற்றும் பிற உடல் குறைபாடுகள் இல்லாமல் இருத்தல்
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு https://arasubus.onlinereg.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.04.2025
இந்த பணியிடங்கள் தொடர்பாக மேலும் விபரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
/indian-express-tamil/media/post_attachments/493cf5c0-19b.jpg)