scorecardresearch

TNSTC Jobs; அரசு போக்குவரத்து கழக வேலை வாய்ப்பு; டிப்ளமோ, பி.இ படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 346 காலியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

TNSTC Jobs; அரசு போக்குவரத்து கழக வேலை வாய்ப்பு; டிப்ளமோ, பி.இ படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் பட்டதாரி மற்றும் டிப்ளமோ பயிற்சி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம், விழுப்புரம், சேலம், மதுரை, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் மற்றும் சென்னை ஆகிய மண்டலங்களில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 346 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 05.12.2022

இதையும் படியுங்கள்: Army Jobs; இந்திய ராணுவத்தில் வேலை; இன்ஜினியரிங் தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

பட்டதாரி பயிற்சி (Graduate Apprentices)

காலியிடங்களின் எண்ணிக்கை: 169 (: 88, சிவில் : 4)

கல்வித் தகுதி : மெக்கானிக்கல் அல்லது ஆட்டோமொபைல் பிரிவில் பொறியியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : ரூ. 9,000

பட்டயப் பயிற்சி (Technician (Diploma) Apprentices)

காலியிடங்களின் எண்ணிக்கை: 177

கல்வித் தகுதி : மெக்கானிக்கல் அல்லது ஆட்டோமொபைல் பிரிவில் டிப்ளமோ படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : ரூ. 8,000

பயிற்சி கால அளவு : 1 வருடம்

தேர்வு செய்யப்படும் முறை : டிப்ளமோ அல்லது பொறியியல் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டிற்கு பயிற்சி அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில்  www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் சம்பந்தப்பட்ட மண்டலங்களின் பெயர்களை தெரிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05.12.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://boat-srp.com/wp-content/uploads/2022/11/TNSTC-All_Regions-Notification_2022-23.pdf என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tnstc recruitment 346 vacancies for diploma and engineering apprentices apply soon