அரசு போக்குவரத்து கழக வேலை வாய்ப்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பட்டப்படிப்பு, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மதுரை, கும்பகோணம் மற்றும் எம்.டி.சி சென்னை ஆகிய மண்டலங்களில் நிரப்பப்பட உள்ளன.
காலியிடங்களின் எண்ணிக்கை
மொத்தம் 668 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. பொறியியல் பட்டதாரி பயிற்சி (Graduate (Engineering) Apprentices) – 85, பட்டயப் பயிற்சி (Technician (Diploma) Apprentices) – 303, பட்டதாரி பயிற்சி (Graduate Apprentices) - 300
கல்வித் தகுதி
Mechanical Engineering / Automobile Engineering/ Civil Engineering/ Electrical and Electronics Engineering பிரிவுகளில் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும். பட்டதாரி பணியிடங்களுக்கு B.A. / B.Sc., / B.Com., / BBA / BCA / BBM படித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை
பட்டதாரி, டிப்ளமோ பயிற்சி இடங்களுக்கு ஏற்ப ரூ. 8,000 - 9,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
டிகிரி, டிப்ளமோ அல்லது பொறியியல் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டிற்கு பயிற்சி அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் சம்பந்தப்பட்ட மண்டலங்களின் பெயர்களை தெரிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 08.07.2024
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.