தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கடைசித் தேதி நெருங்கியுள்ள நிலையில், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 807 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதுகுறித்து போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 807 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்: TNPSC Group 2 Exam: குரூப் 2 மெயின் வினாத் தாள் கசிந்ததா? தேர்வு ரத்தாகுமா? தேர்வர்கள் குழப்பம்
ஓட்டுனர் மற்றும் நடத்துனர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 807
கல்வித் தகுதி : டிரைவர் பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
கண்டக்டர் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : இந்தப் பணியிடங்களுக்கு 24 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 17,700 – 56,200
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு ஆஃப்லைன் அல்லது மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை விண்ணப்பிக்காத போதுமான தகுதியுடையவர்கள் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதியாக 28.02.2023 அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil