/tamil-ie/media/media_files/uploads/2023/02/tnstc.jpg)
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வேலை வாய்ப்பு (படம்: TNSTC இணையதளம்)
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 812 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதுகுறித்து போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 812 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: TNPSC வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!
இந்தநிலையில், 812 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்பப்பட உள்ளன.
ஓட்டுனர் மற்றும் நடத்துனர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 812
மண்டலம் வாரியான காலியிட விவரம்
கும்பகோணம் – 174
சேலம் – 254
கோயம்புத்தூர் – 60
மதுரை – 136
திருநெல்வேலி - 188
கல்வித் தகுதி : டிரைவர் பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
கண்டக்டர் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : இந்தப் பணியிடங்களுக்கு 24 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 17,700 – 56,200
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.