தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் பிட்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேசிய பயிற்சி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வேலைவாய்ப்பு பயிற்சி திட்டங்களில் ஒன்று, தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம். இதன் மூலம் ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் திறன் வாய்ந்த இளைஞர்களை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டத்தில் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதில் தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பிட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பிட்டர் பணியிடங்களுக்கு அப்ரண்டீஸ் பயிற்சி அளிக்கப்படும். மொத்தம் 25 மாதங்கள் அப்ரண்டீஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் 6 மாதங்களுக்கு அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கோவை மண்டலத்தில் உற்பத்தி மற்றும் உருவாக்கம் பிரிவில் இந்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 10
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
பணியிடம் : கோயம்புத்தூர்
பயிற்சிக்கான சம்பளம் : ரூ.8500
இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60f96e398efcd74b163ef3a2 என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேற்கண்ட தகவல்கள் இந்த இணையதள பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil