TNTRB Declared TNTET 2019 Results Paper 1 And Paper 2: ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பின் தகுதி தேர்வான டெட் முதல் தாள், ஜூன் மாதம் 8ம் தேதி அன்றும் , ஆறு முதல் எட்டாம் இரண்டாம் வகுப்பின் தகுதி தேர்வான டெட் இரண்டாம் தாள் ஜூன் மாதம் 9ம் தேதி அன்றும் நடைபெற்றது.
டெட் முதல் தாள் தேர்வை 1,62,314 பேர் எழுதியிருந்தனர், 3,79,733 பேர் இரண்டாம் தாள் தேர்வை எழுதியிருந்தனர்
இந்நிலையில், முதல் தாளின் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 20-ம் தேதியிலும் , இரண்டாம் தாளின் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 22-ம் தேதியும் வெளியிடப்பட்டது.
TNTET 2019 பாஸ் சான்றிதழ் :
இந்த டெட் தேர்வில் பேப்பர்- I மற்றும் பேப்பர்-II வில் பொது வகுப்பினருக்கு குறைந்தது 60% மதிப்பெண்ணும் மற்ற வகுப்பினருக்கு குறைந்தது 55% மதிப்பெண்ணும் பெற்றிந்தால் மட்டுமே பாஸ் சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழக தேர்வு வாரியம் முன்னரே அறிவித்திருந்தது.
இந்த டெட் சான்றிதழை வாங்கியதால் மட்டும் ஆசிரியர் பணி உறுதி செய்யப்படாது. மாறாக, ஒருவர் ஆசிரியர் பணியில் நுழைய வேண்டும் என்றால் அவர் இந்த சான்றிதழை கட்டாயம் வாங்கியாக வேண்டும். இந்த டெட் சான்றிதழ் அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
TNTET 2019 கட் ஆப் மதிப்பெண்:
பிறகு, கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் தேர்வர்கள் தேர்தெடுக்கப் பட்டு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறும் . இந்த மதிப்பெண் கடந்த வருடத்தை விட இந்த வருடம் கூடுதலாக இருக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் , தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்," நியாயமான முறையில் பணி நியமனம் நடை பெரும், எல்லாம் மெரிட் அடிப்படையில் தான் உறுதி செய்யப்படும்", என்று உறுதியளித்துள்ளர்.