தமிழகத்தில் ஆசிரியர் நியமனத் தேர்வு குறித்தும், அதற்கான பாடத்திட்டம் குறித்தும் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இந்த தேர்வுகளில் மிக முக்கியமானது ஆசிரியர் தகுதித் தேர்வு. இந்த தேர்வு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வாகும்.
இதையும் படியுங்கள்: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் ஆக விருப்பம் உள்ளவர்கள், கட்டாயம் இந்த தேர்வு எழுதி, தகுதி மதிப்பெண்ணைப் பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாள் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) படித்தவர்களுக்கும், இரண்டாம் தாள் பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி (B.Ed) படித்தவர்களுக்கும் நடைபெறும்.
டெட் தேர்வுக்குப் பிறகு ஆசிரியர் நியமனத் தேர்வு நடைபெறும். டெட் தாள் 1 மற்றும் டெட் தாள் 2 தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஆயிரக்கணக்கானோர் நியமனத் தேர்வுக்காக தயாராகி வருகின்றனர். இந்த நியமனத் தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதத்தில் அல்லது ஜூன் மாதத்திற்கு வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், ஆசிரியர் நியமனத் தேர்வு தொடர்பாக மே 22 அன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனருடனும் கலந்தாலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்குப் பின் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் புதிய இணையதளத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர் நியமனத் தேர்வுக்கான பாடத்திட்டத்தின் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. சிலபஸ் என்ன என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் அதற்கான லிங்க் கொடுக்கப்பட்டுள்ளதால், விரைவில் பதிவேற்றம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. அந்த லிங்க் https://www.trb.tn.gov.in/syllabus_view.php?tid=STC-12&language=LG-1&status=Active
இதன் மூலம் நியமனத் தேர்வுகளுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவது தெரிகிறது. எனவே விரைவில் நியமனத் தேர்வுக்கான அறிவிப்பு மற்றும் பாடத்திட்டம் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil