/tamil-ie/media/media_files/uploads/2019/07/template-2019-07-12T112616.880.jpg)
TNTET Result 2019 Result, TNTET Result 2019 Result Live
TNTET Answer Key 2019 Answer Key Released: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால், கடந்த மாதம் 8 மற்றும் 9ம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்விற்கான விடைக்குறிப்புகள் TRB அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம், பல்வேறு தெர்வுகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. ஆசிரியர் தெர்வு வாரியம், நடத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில், லட்சக்கணக்கான தேர்வர்கள் கலந்துகொண்டனர். தற்போது இந்த தேர்வின் விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதால், தேர்வர்கள் அனைவரும் விடைக்குறிப்பை டவுன்லோடு செய்து வருகின்றனர். தேர்வர்கள், விடைக்குறிப்பை டிஆர்பியின் அதிகாரப்பூர்வ இணையதளமான trb.tn.nic.in இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. விடைத்தாள் பிடிஎப் பார்மேட்டில் வெளியாகியுள்ளதால், தேர்வர்கள், தங்களது மதிப்பெண்ணை எளிதாக கண்டறிய வழிவகை ஏற்பட்டுள்ளது.
How to download TNTET answer key – ஆசிரியர் தகுதி தேர்விற்கான விடைக்குறிப்பை டவுன்லோடு செய்யும் முறை
1. trb.tn.nic.in இணையதளத்திற்கு செல்லவும்
2. அதன் முகப்பு பக்கத்தில் உள்ள TN TET 2019 Answer Key லிங்கை தேர்வு செய்து உள்நுழையவும்
3. விடைக்குறிப்பு பிடிஎப் பார்மேட்டில் இருக்கும்
4. அதனை டவுன்லோடு செய்து, மதிப்பெண்களை சரிபார்த்துகொள்ளவும்.
முக்கிய அறிவிப்பு : ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB), தற்போது வெளியிட்டிருப்பது தற்காலிக விடைக்குறிப்புகள் தான். இதில் ஏதேனும் ஆட்சேபணை இருந்தால், வரும் 15ம் தேதி, மாலை 05.30 மணிக்குள் TRB அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.