தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் டெட் தேர்வுகளுக்கான உத்தேச விடை குறிப்புகள் (ஆன்சர் கீ) வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடை குறிப்புகளை எவ்வாறு டவுன்லோட் செய்வது என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் டெட் தேர்வு (TNTET Exam) 14.10.2022 முதல் 19.10.2022 வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இந்தத் தேர்வு ஆவரேஜ் என்ற அளவில் இருந்ததாக தேர்வர்களும் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.
இதையும் படியுங்கள்: AOC Jobs 2022; ராணுவ ஆயுதப் படையில் 419 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!
இந்தநிலையில், தேர்வர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் (TNTET Answer Key) தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை டவுன்லோட் செய்ய கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
ஆன்சர் கீ டவுன்லோட் செய்வது எப்படி?
முதலில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான http://trb.tn.nic.in/ என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள டெட் தேர்வு (TNTET) உத்தேச விடைகள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர் நீங்கள் அடுத்தப்பக்கத்திற்கு செல்வீர்கள், அங்கு தேர்வு தேதி மற்றும் தேர்வு நேரம் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் நீங்கள் தேர்வு எழுதிய தேதி மற்றும் நேரத்தைக் கிளிக் செய்யவும்.
இப்போது தோன்றும் பக்கத்தில் தமிழ், ஆங்கிலம் என பல்வேறு மொழிகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் நீங்கள் தேர்வு எழுதிய மொழியைத் தேர்வு செய்தால், உங்களுக்கான விடைக்குறிப்புகள் காண்பிக்கப்படும். அதனை நீங்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். அதில் நீங்கள் விடையளித்ததை சரிபார்த்துக் கொள்ளலாம்.
மற்றொரு முறையாக, நேரடியாக விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்ய இந்த இணையதளப் பக்கத்தைக் கிளிக் செய்யுங்கள். http://trb.tn.nic.in/TET_2022/28102022/msg%20TK.htm
இந்த விடைகுறிப்புகள் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது கருத்துக்கள் இருந்தால், நீங்கள் விடைகுறிப்பை சவால் செய்யலாம். இதற்காக, விண்ணப்பதாரர்கள் பின்வரும் நடைமுறையைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
படி 1 - இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
படி 2 – விண்ணப்பதாரரின் பதிவு எண்/பதிவு எண்ணை பதிவு எண் புலத்தில் உள்ளிடவும்
படி 3 – விண்ணப்பதாரரின் பிறந்த தேதியைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 4 - தேர்வு தேதியைத் தேர்ந்தெடுக்கவும்
படி 5 - உங்கள் தொகுப்பைத் (Batch) தேர்ந்தெடுக்கவும்
படி 6 - போர்டல் திரையில் காட்டப்படும் கேப்ட்சாவை உள்ளிடவும்
படி 7 - OT பதிவு படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்பதாரர் சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும், மேலும் கணினி விண்ணப்பதாரரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP ஐ உருவாக்கும்
படி 8 - வெற்றிகரமான OTP சரிபார்ப்புக்குப் பிறகு, கணினி விண்ணப்பதாரரின் OT இறங்கும் பக்கத்திற்கு நகரும்
படி 9 - வழிமுறைகளைப் படித்து, அறிவிப்பை ஏற்கவும்
படி 10 – முதன்மை வினாத்தாளைப் பார்க்க - "முதன்மை வினாத்தாளைப் பார்க்க” என்பதை இங்கே கிளிக் செய்யவும்"
படி 11 - கொடுக்கப்பட்ட புலங்களில் ஆட்சேபனையை எழுப்பவும்
படி 12 - தேவையான ஆவணத்தைப் பதிவேற்றி சேமி மற்றும் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.