தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் டெட் தேர்வுகளுக்கான இறுதி விடை குறிப்புகள் (ஆன்சர் கீ) வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடை குறிப்புகளை எவ்வாறு டவுன்லோட் செய்வது என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் டெட் தேர்வு (TNTET Exam) 14.10.2022 முதல் 19.10.2022 வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. தமிழக அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியை பெற இந்த தேர்வை எழுதுவது கட்டாயமாகும். எனவே லட்சக்கணக்கானோர் இந்த தேர்வை ஆர்வமுடன் எழுதினார். இந்தத் தேர்வு ஆவரேஜ் என்ற அளவில் இருந்ததாக தேர்வர்களும் நிபுணர்களும் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்: ஜே.இ.இ தேர்வு தகுதி அளவுகோல்களை தளர்த்துங்கள்; கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தல்
இந்தநிலையில், தேர்வர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் (TNTET Answer Key) கடந்த அக்டோபர் மாதத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு கேள்விகளுக்கு உத்தேச விடைக்குறிப்பில் தேர்வர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.
தேர்வு வாரியம் இணையதளம் மூலமாக தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க அனுமதித்திருந்தது. இதனையடுத்து பல்வேறு தேர்வர்களும் தங்கள் ஆட்சேபனைகளை இணையத்தில் தகுந்த விளக்கங்களுடன் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் பெறப்பட்ட அனைத்து ஆட்சேபனைகளையும் பாடவாரியாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டு விடைக்குறிப்புகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வுக்குப் பின் பாட வல்லுநர் குழுவால் இறுதி செய்யப்பட்ட விடைக் குறிப்புகளின் அடிப்படையில் தேர்வர்களது கணினி வழித் தேர்வினை மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன.
இந்தநிலையில், வல்லுனர் குழு ஆய்வின் முடிவின்படி, இறுதி விடைக்குறிப்புகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை டவுன்லோட் செய்ய கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
ஆன்சர் கீ டவுன்லோட் செய்வது எப்படி?
முதலில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான http://trb.tn.nic.in/ என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள டெட் தேர்வு (TNTET) இறுதி விடைகள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர் நீங்கள் அடுத்தப்பக்கத்திற்கு செல்வீர்கள், அங்கு தேர்வு தேதி மற்றும் தேர்வு நேரம் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் நீங்கள் தேர்வு எழுதிய தேதி மற்றும் நேரத்தைக் கிளிக் செய்யவும்.
இப்போது தோன்றும் பக்கத்தில் தமிழ், ஆங்கிலம் என பல்வேறு மொழிகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் நீங்கள் தேர்வு எழுதிய மொழியைத் தேர்வு செய்தால், உங்களுக்கான விடைக்குறிப்புகள் காண்பிக்கப்படும். அதனை நீங்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். அதில் நீங்கள் விடையளித்ததை சரிபார்த்துக் கொள்ளலாம்.
மற்றொரு முறையாக, நேரடியாக விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்ய இந்த இணையதளப் பக்கத்தைக் கிளிக் செய்யுங்கள். http://trb.tn.nic.in/TET_2022/07122022/Final%20key.pdf
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil