/indian-express-tamil/media/media_files/v23laWkv66TDS6RJ4C8K.jpg)
TNTET exam 2025
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் தாள்-1 தேர்விலும், பி.எட் முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் தாள்-2 தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.
2025 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் விண்ணப்பப் பதிவு நிறைவடைந்து, மொத்தம் 4.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இதுவரை ஆறு முறை நடத்தப்பட்ட டெட் தேர்வுகளில், இந்த ஆண்டு விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
குறிப்பாக, கடந்த 2014 ஆம் ஆண்டு சுமார் 6.5 லட்சம் முதல் 7 லட்சம் பேரும், 2013 ஆம் ஆண்டு 6.65 லட்சம் பேரும் விண்ணப்பித்தனர். ஆனால், மற்ற நான்கு தேர்வுகளிலும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டவில்லை. இந்த ஆண்டு, நான்கு தேர்வுகளைக் காட்டிலும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை அதிகரித்ததற்கான காரணம்
சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஒரு உத்தரவு இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்கள், இதுவரை டெட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், இந்தத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதனால், ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்களும் இந்தத் தேர்வுக்கு அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர்.
இந்தக் கூடுதல் விண்ணப்பதாரர்களால் டெட் தேர்வுக்கான போட்டி மேலும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நவம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us