/tamil-ie/media/media_files/uploads/2018/01/tet-exam.jpg)
TNTET Result 2019 Result paper 2
TNTET Paper 1 Result 2019 Declared @trb.nic.in: அனைவரும் எதிர்பாத்த, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான இடைநிலை ஆசிரியர் பணிக்கான பேப்பர்-1 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதன் மதிப்பெண் விவரம் (Score Card) 22.08.2019 அன்று வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு டெட் பேப்பர்- I இல் பொது வகுப்பினரில் 60% மற்றும் அதற்கு மேல் பெற்ற தேர்வர்களுக்கு (அதாவது, 90 மதிப்பெண்) பாஸ் சான்றிதழ் வழங்கப்படும்.
பி.சி (எம்), எம்.பி.சி/டி.என்.சி, எஸ்சி, எஸ்சி (ஏ), எஸ்.டி மற்றும் ஊனமுற்றோர் வகுப்பினரில் 55%மற்றும் அதற்கு மேல் பெற்ற தேர்வர்களுக்கு (அதாவது,82 மதிப்பெண்) பாஸ் சான்றிதழ் வழங்கப்படும்.
TNTET Paper 1 Result 2019 Declared @trb.nic.in
பேப்பர் ஒன்றில்தேர்வு எழுதிய 1 புள்ளி 63 லட்சம் பேரில் மிக குறைந்த எண்ணிக்கையிலானவர்களே பாஸ் சான்றிதழ் வாங்கும் அளவிற்கு தேர்ச்சி அடைந்துள்ளதாகவும், பெரும்பாலனவர்கள் தோல்வி அடைந்துள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேர்வு எழுதிய பெரும்பாலானவர்கள் 60 மதிப்பெண்களுக்கும் குறைவாகவே பெற்று இருப்பதால், அவர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களிடம் சந்திக்கும்போது: பேப்பர் II முடிவுகள் மிக விரைவில் வெளியாகும் என்றும், கவுன்சிலிங் அதி விரைவில் முடிக்கப்பட்டு தகுதியானவர்கள் ஆசிரியர்களாக பணி அமர்த்தப் படுவார்கள் என்று தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.