TNTRB Releases TNTET Result 2019: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் தேர்வு முடிவுகள் அடுத்த ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என தெரிகிறது. தேர்ச்சி பெறுகிறவர்கள் உடனடியாக பணியில் அமர்த்தப்படுவார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். இரண்டாம் தாள் தேர்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியாக இருக்கிறது.
TNTET Result 2019 Paper 2: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இரண்டாம் தாள் முடிவுகள் வெளியீடு
தமிழகத்தின் பள்ளிகளில் 1ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வை ( Teacher Eligibilty Test(TET)) எழுதியிருக்க வேண்டும். இந்தாண்டிற்கான டெட் தேர்வு விண்ணப்ப பதிவு, ஆன்லைன் முறையில் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதியில் இருந்து ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெற்றிருந்தது.
TNTET Result 2019 Live: TNTET Paper 1 Result 2019 Live Updates
டெட் தேர்வின் முதல் தாள், ஜூன் மாதம் 8ம் தேதி ( சனிக்கிழமை) காலை 10 மணிமுதல் 1 மணிவரையிலும், இரண்டாம் தாள் ( 9ம் தேதி- ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிமுதல் 1 மணி வரையிலும் நடைபெற்றது. டெட் முதல் தாள் தேர்வை 1,62,314 பேர் எழுதியிருந்தனர்.
இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
TNTET exam results 2019: குறைந்த மதிப்பெண்கள், தேர்வர்கள் ஷாக்
ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் தேர்வு முடிவுகள் அடுத்த ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என தெரிகிறது. முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த ஒரு வாரத்திற்குள் கவுன்சலிங் நடைபெறும் என்றும், தேர்ச்சி பெறுகிறவர்கள் உடனடியாக பணியில் அமர்த்தப்படுவார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.