/tamil-ie/media/media_files/uploads/2019/06/template-42.jpg)
tnteu.ac.in b.ed result 2019: tamil nadu teachers education university b.ed results @tnteu.ac.in- தமிழ்நாடு பி.எட். தேர்வு முடிவுகள்
Tamil Nadu B.Ed Results @tnteu.ac.in: தமிழ்நாடு கல்வியியல் கல்லூரிகளின் பி.எட் தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகளை காணும் முறை இங்கு விவரிக்கப்படுகிறது. மாணவர்கள் எளிய ஸ்டெப்களில் தேர்வு முடிவுகளை காணலாம்.
தமிழகம் முழுவதும் உள்ள கல்வியியல் கல்லூரிகள், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இந்தக் கல்லூரிகளில் கடந்த மே, ஜூன் மாதம் நடைபெற்ற பி.எட் சிறப்புத் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகம் வெளியிட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/a263-300x217.jpg)
How To Check B.Ed Results @tnteu.ac.in - தமிழ்நாடு பி.எட். தேர்வு முடிவுகள்
தேர்வு எழுதிய பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளமான tnteu.ac.in -ல் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். தேர்வு முடிவுகளை எளிய முறையில் ‘செக்’ செய்யும் ஸ்டெப்கள் இங்கு தரப்படுகின்றன.
1. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU) அதிகாரபூர்வ இணையதளமான tnteu.ac.in-ல் நுழையவும்.
2. இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் TNTEU B.Sc B.Ed March result 2019 என்கிற லிங்க்-கில் க்ளிக் செய்யவும்.
3. அதன் மூலமாக இணையதளத்தில் புதிய பக்கத்தை காணலாம்.
4. அதில் பி.எட். பதிவு எண்ணை சமர்ப்பித்து, ரிசல்ட்டை தெரிந்துகொள்ள முடியும்.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள முயற்சிப்பதால், இணையதளம் அவ்வப்போது முடங்கி விடுகிறது. இதனால் தேர்வர்கள் முடிவுகளை அறிய தவித்து வருகிறார்கள். பொறுமையாக தேர்வு முடிவுகளை பார்க்கும்படி பல்கலைக்கழகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
Read More: TNTEU B.Ed Result Tamil Nadu: தமிழ்நாடு பி.எட் தேர்வு முடிவுகள், நேரடி லிங்க் இங்கே..!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.