Tamil Nadu Teachers Education University: இந்தியாவில் உயர் கல்விகளுக்கு பெயர் போன இடமான தமிழகம் விளங்குவதற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முக்கிய காரணமாக விளங்கி வருகிறது. இநதியாவில் ஆசிரியர் திறமைகளை மேம்படுத்துவதற்காக பிரத்தியோகமாக உருவாக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் இதுவாகும். மேலும், ஆசிரியர் கல்விக்கான பி.எட், எம்.எட் படிப்புகளை கற்றுக் கொடுக்கும் தமிழகத்தில் உள்ள 665 கல்லூரிகள் இப்பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளன.
இந்தக் கல்லூரிகளில் கடந்த மே, ஜூன் மாதம் நடைபெற்ற பி.எட்/ பி.எட் ஸ்பெஷல் தேர்வு முடிவுகளை நேற்று பல்கலைக்கழகம் தனது அதிகாரப் பூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டு இருந்தது.
இருந்தாலும், கடுமையான இன்டர்நெட் ட்ராபிக் காரணமாக தேர்வர்கள் தங்கள் முடிவுகளை காண முடியாத சூழ் நிலை உருவாகி இருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் http://18.189.239.149/~tnteure/ ( மே / ஜூன், B.Ed./B.ED.SPL தேர்வு முடிவு லிங்க் 2 ) என்ற புதிய இணைப்பை தற்போது உருவாக்கி உள்ளது. இந்த லிங்கின் மூலம் தேர்வு முடிவகள் எந்த வித சிக்கலும் இல்லாமல் கிடைக்கின்றன என்று சில தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் பதிவு என்னை டைப் செய்தவுடன் தேர்வு முடிவுகள் திரையில் காண்பிக்கப்படுகின்றன.
பொதுவாக, கல்லூரித் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் மறுக்கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு போன்ற நடைமுறைத் தொடங்கப்படும். தேர்வு முடிவில் திருப்தி இல்லாத மாணவர்கள் இதற்கான முயற்சிகளை எடுப்பார்கள். இந்த மறுகூட்டல் தொடர்பான அறிவிப்புகள் இன்னும் ஒரு சில நாட்களில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தனது அதிகாரப் பூர்வ அறிவிப்பில் வெளியிடப்படும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன.
மேலும், இத்தேர்வின் அதிகாரப் பூர்வ மார்க் சீட் இன்னும் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என்று நம்பப்படுகிறது.