TNUSRB announced Police constable jobs 2022 notification released soon: தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஜூன் 30 தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காவல்துறையில் பணிபுரிய வேண்டும் என்பது பலரின் கனவு. இதற்காக தமிழகத்தில் உள்ள இளைஞர்கள், காக்கிச் சட்டையை எப்படியாவது போட்டே தீருவேன் என்ற உறுதியோடு, நாள்தோறும் தங்களை உடல் ரீதியாகயும், படிப்பு ரீதியாகவும் தயார்படுத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: 13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: சம்பளம், தேர்வு முறை என்ன?
இந்தநிலையில், தமிழக இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம். தமிழக காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளுக்கான இரண்டாம் நிலை மற்றும் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு முறையை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.
அந்த வகையில், தமிழக காவல்துறையில் உள்ள இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறையில் உள்ள இரண்டாம் நிலைக் காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு, ஜூன் 30 தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், தேவை உடற்தகுதியும் வேண்டும். எனவே, நல்ல உடற்தகுதியுடன், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, காவலராக விருப்பமுள்ளவர்கள் தேர்வுக்கு தயாராகிக் கொள்ளுங்கள்.
இந்த ஆண்டு அறிவிப்பில், 10000க்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே காவல்துறை வேலை வேண்டும் என நினைப்பவர்கள் அதற்கேற்றாற்போல் தயாராகிக் கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil