/tamil-ie/media/media_files/uploads/2020/11/counselling.jpg)
TNUSRB answer key
TNUSRB Police constable answer key: தமிழ்நாடு காவல்துறை, சிறைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் காலியாக உள்ள 10,907 + 79 (பி. எல் ) காலிப் பணியிடங்களை பொதுத் தேர்வுகளுக்கான உத்தேச விடைகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டது.
தேர்வர்கள் answer key எனப்படும் உத்தேச விடைக் குறிப்பு தேர்வு குழுமத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.tnusrbonline.org லிருந்து பதிவிறக்கம் செய்யலாம்
தேர்வு குழுமத்தால் வெளியிடப்படும் கொள்குரிவகைத் தேர்விற்கான உத்தேச விடைகள் தொடர்பாக முறையீடு செய்ய வேண்டுமானால், காவல் பொது ஆய்வாளர், TAMIL NADU UNIFORMED SERVICES RECRUITMENT BOARD பழைய காவல் ஆணையாளர் அலுவலக வளாகம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை-8 என்ற முகவரிக்கு வரும் டிசம்பர் 23ம் தேதிக்குள் தகுந்த ஆவணத்துடன் முறையீடை அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 13ம் தேதியன்று தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது உத்தேச விடைக் குறிப்பை தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது.
tnusrb Answer key: டவுன்லோட் செய்வது எப்படி?
www.tnusrbonline.org என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
முகப்புப்பக்கத்தில், ‘Preliminary Answer Key ’ என்பதை கிளிக் செய்க.
answer key-ஐ பார்க்கலாம்.
எதிர்கால தேவைக்காக ஒப்புதல் சீட்டை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இத்தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்கள் இத்தேர்வுக்கான கல்வித்தகுதியான 10 ம் வகுப்பினை தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்களுக்கு இறுதி தற்காலிகத் தேர்வின் போது மட்டுமே (Final Provisional Selection) வகுப்பு வாரியாக 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகளின் போது 20 சதவீத முன்னுரிமை பின்பற்றப்பட மாட்டாது.
அனைத்து சமீபத்திய அரசு வேலைகள் , ரயில்வே வேலைகள், வங்கி வேலைகள் மற்றும் இதர வேலைகள் குறித்து அறிய இந்தியன் எக்ஸ்பிரஸின் தமிழ் பதிப்பான ஐஇ தமிழுடன் இணைந்திருங்கள். வங்கி, ரயில்வே மற்றும் அரசு வேலைகள் குறித்த விரைவான மற்றும் உங்களுக்கான பொருத்தமான அறிவிப்புகளை நாங்கள் உங்களுக்காக இங்கே கொண்டு வருகிறோம். தொடர்ந்து இணைந்திருங்கள் ஐஇ தமிழுடன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.