TNUSRB Police Constable Hall Ticket 2019: தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலமாக காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 8826 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான தேர்வு 2019 ஆகஸ்ட் 25-ல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் இன்று (ஆகஸ்ட் 13) வெளியாகி இருக்கிறது. தேர்வு நெருங்கும் முன்பு ஹால் டிக்கெட்டை டவுண்லோடு செய்து கொள்வதன் மூலமாக இறுதி நேர பதற்றத்தை தவிர்க்க முடியும்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB), காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 8,826 காலிப்பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்றது. காலியிடங்கள் விவரம் வருமாறு: இரண்டாம் நிலை காவலர் (கான்ஸ்டபிள் - ஆயுதப்படை) – 2,465 காலியிடங்கள், இரண்டாம் நிலை காவலர் (சிறப்பு காவல்படை) – 5,962 காலியிடங்கள், இரண்டாம் நிலை காவலர் (சிறைக்காவலர்) – 208 காலியிடங்கள், தீயணைப்புத்துறை - 191 காலியிடங்கள். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள்.
How To Download TNUSRB Police Constable Hall Ticket 2019: தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியம் ஹால் டிக்கெட்
எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக பணிக்கு தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். விண்ணப்பிக்கும் நடைமுறை ஏற்கனவே முடிந்துவிட்டது. வருகிற (ஆகஸ்ட்) 25-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ஹால் டிக்கெட் இன்று (ஆகஸ்ட் 13) வெளியிடப்பட்டது.
தேர்வர்கள் சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரபூர்வ இணையதளமான tnusrbonline.org என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை டவுண்லோடு செய்யலாம். ஹால் டிக்கெட் டவுண்லோடு செய்யும் முறை வருமாறு:
1. அதிகாரபூர்வ இணையதளமான tnusrbonline.org -ல் நுழையவும்.
2. அதில் ‘log in for written exam hall ticket' என குறிப்பிட்ட இடத்தில் க்ளிக் செய்யவும்.
3. அதில் உரிய தகவல்களை பதிவு செய்து ஹால் டிக்கெட் டவுண்லோடு செய்யலாம்.
தேர்வு நெருங்கும் முன்பு ஹால் டிக்கெட்டை டவுண்லோடு செய்து கொள்வதன் மூலமாக இறுதி நேர பதற்றத்தை தவிர்க்க முடியும். எனவே விண்ணப்பதாரர்கள் விரைவில் ஹால் டிக்கெட் டவுண்லோடு செய்து கொள்வது நல்லது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.