தமிழ்நாடு காவல்துறையில் போலீஸ் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்த ஆண்டு கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 3,552 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு நவம்பர் 27 ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது.
இதையும் படியுங்கள்: TNPSC Group 4: குரூப் 4, வி.ஏ.ஓ கட் ஆஃப் எவ்வளவு இருக்கும்? ரிசல்ட் எப்போது?
இந்த தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் வினாக்கள் எளிமையாக இருந்ததாக நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் காவலர் தேர்வுக்கான கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
ஆண்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 54 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 53 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 53க்கு மேலும், SC பிரிவினருக்கு 52க்கு மேலும், BCM பிரிவினருக்கு 46க்கு மேலும், SCA பிரிவினருக்கு 51க்கு மேலும், ST பிரிவினருக்கு 50 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 46 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 45 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 46க்கு மேலும், SC பிரிவினருக்கு 45க்கு மேலும், BCM பிரிவினருக்கு 28க்கு மேலும், SCA பிரிவினருக்கு 44க்கு மேலும், ST பிரிவினருக்கு 42 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil