/tamil-ie/media/media_files/uploads/2019/09/tnusrb.jpg)
tnusrb exam recuritment process postponed
Tamil Nadu Uniformed Services Recruitment Board Released police exam result @tnusrb.tn.gov.in : தமிழகத்தில் காவல், சிறை, தீயணைப்பு, மற்றும் மீட்பு பணிகள் உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள 8,888 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம், கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி, 32 மாவட்ட தேர்வுமையங்களில் நடத்தியது. இத்தேர்வில், 3 லட்சத்து 22 ஆயிரத்து 76 பேர் பங்கேற்றிருந்தனர்.
இந்த தேர்வின் முடிவுகள், http://tnusrbonline.org/ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அடுத்தக்கட்ட தேர்வான உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு, உடற்திறன் போட்டி மற்றும் அசல் சான்றிதழ் சரிபார்த்தல் 1:5 என்ற விகிதத்தில் கலந்து கொள்வதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் பதிவு எண்களும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
மாவட்ட வாரியாக தேர்வு பெற்றவர்களின் விபரங்களை அறிய
தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான அழைப்பு கடிதம் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.