scorecardresearch

செம்ம சான்ஸ்; 621 காலியிடங்கள்: தமிழக காவல் துறையில் எஸ்.ஐ பதவிக்கு நேரடி தேர்வு

தமிழக காவல் துறையில் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) 2023 நேரடி தேர்விற்க்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

TNUSRB SI Recruitment 2023: Registration for 621 posts begins on June 1 tamil news
TNUSRB Recruitment 2023 Notification Out for the 621 Sub-Inspector Posts Tamil News

TNUSRB SI Recruitment 2023 Tamil News: காவல்துறை வேலை என்பது பலருக்கு கனவு. இதற்காக வருடகணக்கில், தங்களின் உடல்திறனையும், அறிவுத்திறனையும் வளர்த்து வருவோர் அதிகம். இந்தநிலையில், தமிழக காவல்துறையில் சார்பு ஆய்வாளர் பணிக்கான தேர்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்.

தகுதி உள்ளவர்கள் ஜூன் 30ம் தேதிக்குள் https://tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல் உதவி ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) பதவிகளுக்கான தேர்வு நடக்க உள்ளன.

  1. கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில், பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  1. வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை மாதம் முதல் தேதி அன்று 20 வயதுக்கு நிறைவுற்றவராகவும் 30 வயது மிகாமலும் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு வழங்கப்படும் அதிகபட்ச வயது வரம்பிற்கான தளர்வுகள் பின்வருமாறு.

  1. தேர்வுக் கட்டணம்

தேர்வு கட்டணம் ரூபாய்.500/- பொது மற்றும் காவல் துறை சார்ந்த ஒதுக்கீடு ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூபாய்.1000/- தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். தேர்வு கட்டணத்தை வங்கியின் செலுத்துச்சீட்டு அல்லது இணையவழி கட்டணம் முலம் செலுத்தலாம்’ என்று கூறியுள்ளது.

4. காலியிட விவரங்கள்:

காவல் துணை கண்காணிப்பாளர்கள் (தாலுகா): 366 பணியிடங்கள்
சப்-இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ் (ஏஆர்): 145 பதவிகள்
காவல் துணை கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பி ): 110 பணியிடங்கள்

இதுகுறித்து மேலும் அறிய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இணைய பக்கத்தை https://www.tnusrb.tn.gov.in/ta/sitaluk-tnusrb-ta.php -என்ற லிங்க்-கில் பார்க்கவும்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tnusrb si recruitment 2023 registration for 621 posts begins on june 1 tamil news