தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன வேலைவாய்ப்பு; 8, 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் வேலை; 8, 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

TNWC invites application for Record Clerk and Office assistant posts: தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் பதிவுரு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் பதிவுரு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.01.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

பதிவுரு எழுத்தர் (Record Clerk)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 15,900 – 50,400

அலுவலக உதவியாளர் (Office Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 13

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 15,700 – 50,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tnwc.in/wp-content/uploads/2021/12/tnwc_application_form.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்கச் செய்ய வேண்டும்.

முகவரி : The General Manager, Tamil Nadu Warehousing Corporation, 82, Anna Salai, Guindy, Chennai – 600 032

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.01.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tnwc.in/wp-content/uploads/2021/12/tnwc_application_form.pdf என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tnwc invites application for record clerk and office assistant posts

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com