NIRF 2024 Agricultural and Allied Category: ஆகஸ்ட் 12, திங்கட்கிழமை கல்வி அமைச்சகம் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பை (NIRF) 2024ஐ அறிவித்தது. இந்த ஆண்டு விவசாயம் மற்றும் அது சார்ந்த படிப்புகளின் கீழ், டெல்லியின் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் முதலிடத்தைப் பிடித்தது. தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம், பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் முறையே இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன.
ஆங்கிலத்தில் படிக்க: Top 10 agriculture and allied sector colleges in India: NIRF 2024 Rankings
விவசாயம் மற்றும் அது சார்ந்த பிரிவுகளின் கீழ் உள்ள டாப் 10 கல்லூரிகளின் பட்டியல் இங்கே:
1. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
2. ICAR - தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம்
3. பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம்
4. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
5. இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், இசட்நகர்
6. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
7. சவுத்ரி சரண் சிங் ஹரியானா வேளாண் பல்கலைக்கழகம்
8. ஜி.பி. பந்த் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
9. மத்திய மீன்வளக் கல்வி நிறுவனம், மீன்வளப் பல்கலைக்கழகம்
10. காஷ்மீரின் ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
2023 ஆம் ஆண்டில் என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசையில் 83.16 மதிப்பெண்களுடன் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், புது தில்லி முதலிடத்தைப் பிடித்தது. என்.ஐ.ஆர்.எஃப் 2023 இல் இரண்டாவது இடத்தை 70.45 மதிப்பெண்களுடன் ஹரியானாவின் கர்னாலில் உள்ள ICAR - தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் பெற்றது.
பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம், லூதியானா 65.98 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தையும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் 63.68 புள்ளிகளுடன் 2023 தரவரிசையில் நான்காவது இடத்தையும் பிடித்தன. முதல் நான்கு இடங்கள் ஒரே மாதிரியாக இருந்தன, ஆனால் கடந்த ஆண்டு தரவரிசையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 61.71 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது, இந்த ஆண்டு இசட்நகரில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் அந்த இடத்தைப் பிடித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“