கோவை மாணவர்கள் கவனத்திற்கு... டாப் 10 பொறியியல் கல்லூரிகளின் லிஸ்ட் இதோ!
கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாப் 10 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இது முன்னாள் மாணவர்களின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாப் 10 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இது முன்னாள் மாணவர்களின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தின் டாப் 10 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை கல்வியாளர் தினேஷ் பிரபு தனது யூடியூப் சேனலில் குறிப்பிட்டுள்ளார். முக்கியமாக, NIRF ரேங்கிங், வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள் (அதிகபட்ச மற்றும் சராசரி சம்பள தொகுப்புகள்), பாடப்பிரிவுகள் மற்றும் பிற வசதிகளின் அடிப்படையில் இதனை குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
இதன் பட்டியலை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கக் கூடிய கல்லூரிகளின் தொகுப்பை காணலாம். இதில் முதலாவதாக கவுன்சிலிங் கோட் 2006 என்பதை கொண்ட பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி இடம்பெறுகிறது. NIRF தரவரிசை பட்டியலில் அகில இந்திய அளவில் 67-வது இடத்தை இந்தக் கல்லூரி பெறுகிறது. இங்கு பயின்ற மாணவர்களில் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 68 லட்சம் வரை ஊதியம் பெறும் வகையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இரண்டாவது இடத்தில் கோயம்புத்தூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி இடம்பெற்றுள்ளது. இதன் கவுன்சிலிங் கோட் 2007 ஆகும். NIRF தரவரிசை பட்டியலில் 101-150 இடத்தை பெறுகிறது. இந்தக் கல்லூரியில் பயின்ற மாணவர்களில் அதிகபட்சமாக ரூ. 52 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறக் கூடிய வகையில் வேலைகளில் சேர்ந்துள்ளனர். சராசரியாக ஆண்டுக்கு ரூ. 7 - ரூ. 8 லட்சம் என்ற அடிப்படையில் மாணவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.
அடுத்த இடத்தில் அரசு பொறியியல் கல்லூரி இடம்பெற்றுள்ளது. இந்தக் கல்லூரியின் கவுன்சிலிங் கோட் 2005 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் குறைவான கல்விக் கட்டணமே இங்கு வசூலிக்கப்படுகிறது. NIRF தரவரிசை பட்டியலில் 201-300 என்ற அடிப்படையில் இந்த கல்லூரி இடம்பெறுகிறது. இக்கல்லூரியில் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 36 லட்சம் வரை சம்பளம் பெறும் வகையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர். சராசரியாக ரூ. 5 முதல் ரூ. 6 லட்ச வரை ஆண்டுக்கு வருமானம் ஈட்டக் கூடிய பணிகளில் மாணவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
Advertisment
Advertisements
நான்காவது இடத்தில் பி.எஸ்.ஜி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி & ரிஸர்ச் கல்லூரி வருகிறது. இந்தக் கல்லூரி NIRF தரவரிசை பட்டியலில் 101-150 இடத்தை பெறுகிறது. இக்கல்லூரி முற்றிலும் தனியார் கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர ஆண்டுக்கு ரூ. 32 லட்சம் சம்பளம் பெறும் வகையில் பந்நாட்டு நிறுவனங்களில் இக்கல்லூரி மாணவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சராசரியாக ரூ. 8 லட்சம் வரை ஆண்டு வருமானம் கிடைக்கக் கூடிய நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.
இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி இடம்பெற்றுள்ளது. இந்தக் கல்லூரியும் NIRF தரவரிசை பட்டியலில் 101-150 இடத்தை பெற்றுள்ளது. இக்கல்லூரியில் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 40 லட்சம் சம்பளம் பெறும் வகையிலான நிறுவனங்களில் மாணவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சராசரியாக ரூ. 6 முதல் ரூ. 7 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறும் வகையில் மாணவர்கள் பணியிடங்களை பெற்றுள்ளனர். இந்த 5 கல்லூரிகள் முதல் ஐந்து இடங்களை கோவை மாவட்டத்தில் பெறுகின்றன.
இதற்கு அடுத்த இடங்களில் ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, ஸ்ரீ ஈஷ்வர் பொறியியல் கல்லூரி, கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி, கே.ஐ.டி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி ஆகியவை இடம்பெறுகின்றன. மாணவர்கள் இந்தக் கல்லூரிகளை பரிசீலிப்பதற்கு முன்பாக, நேரடியாக சென்று கல்விக் கட்டணம் மற்றும் மற்ற வசதிகள் குறித்து ஆராய்ந்த பின்னர் முடிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.