பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய தமிழகத்தில் உள்ள டாப் 10 என்ஜீனியரிங் கல்லூரிகள் எவை என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கையை, அண்ணாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. இந்த பொறியியல் படிப்புகளுக்கு https://www.tneaonline.org/ என்ற இணையதளப் பக்கம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் தற்போது 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்துள்ளது. மே மாதத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டு, ஜூன், ஜூலை மாதங்களில் உயர் கல்வி சேர்க்கை நடைபெறும். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பொறியியல் படிப்புக்கு நல்ல மவுசு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், தமிழகத்தின் டாப் 10 பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் சேனலில் பட்டியலிட்டுள்ளார். இதில் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு, கற்பிக்கும் முறை, வேலை வாய்ப்பு, செண்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் உள்ளிட்டவை அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
முதல் இடத்தில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் உள்ளன. இதில் சி.இ.ஜி மற்றும் எம்.ஐ.டி கேம்பஸ்கள் அடங்கும்.
2 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள எஸ்.எஸ்.என் எனப்படும் ஸ்ரீசிவசுப்ரமணிய நாடார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.
3 ஆவது இடத்தில் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.
4 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.
5 ஆவது கோவையில் உள்ள பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூப் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச் உள்ளது.
6 ஆவது இடத்தில் கோவையில் உள்ள கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது.
7 ஆவது இடத்தில் கோவையில் உள்ள கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளது.
8 ஆவது இடத்தில் கோவையில் ஸ்ரீகிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.
9 ஆவது இடத்தில் கோவையில் உள்ள ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.
10 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“