Top 10 Engineering colleges list under Anna University in Tirunelveli region: தமிழகத்தில் பொறியியல் படிப்பதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. ஐ.டி துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் காரணமாக பொறியியல் படிப்புகளுக்கான மோகம் அதிகரித்துள்ளது. இந்தநிலையில், தமிழகத்தின் திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள டாப் 10 பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கையை, அண்ணாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. இந்த பொறியியல் படிப்புகளுக்கு https://www.tneaonline.org/ என்ற இணையதளப் பக்கம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படியுங்கள்: சேலம் மண்டலம் டாப் 10 பொறியியல் கல்லூரிகள் எவை?
பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களில் பெரும்பாலானோரின் தேர்வு முதலில் சென்னை, அடுத்தது கோவை என்று தான் உள்ளது. சென்னையில் உள்ள கல்லூரிகளின் தரம் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவை மாணவர்களை சென்னை பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வைக்கிறது. இதேபோல், கோவை பகுதியில் உள்ள கல்லூரிகளும் மாணவர்களால் அதிகம் விரும்பப்படுகிறது.
அதேநேரம், சென்னை, கோவை தவிர, தமிழகத்தின் பிற பகுதிகளில் தரமான, சிறப்பான, நல்ல வேலைவாய்ப்பை பெற்றுத் தரக்கூடிய ஏராளமான கல்லூரிகள் உள்ளன. அந்த வகையில் திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மண்டலங்களிலும் சிறந்த கல்லூரிகள் நிறைய உள்ளன.
இந்தநிலையில், கல்வியாளர் ரமேஷ்பிரபா தனது யூடியூப் சேனலில் தமிழகத்தின் திருநெல்வேலி பகுதியில் உள்ள டாப் 25 பொறியியல் கல்லூரிகள் எவை என பட்டியலிட்டுள்ளார். இதில் டாப் 10 பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம். இதில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த டாப் 25 பொறியியல் கல்லூரிகளின் தரவரிசையானது, அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள கல்லூரி முன்னுரிமை பட்டியல் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 வருடங்களில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளில் பொதுப்பிரிவினருக்கு கட் ஆஃப் மதிப்பெண்களின் சராசரி அடிப்படையில் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி பகுதியில் முதலிடத்தில் உள்ளது.
2 ஆம் இடத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இம்மானுவேல் அரசர் ஜெ.ஜெ காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.
3 ஆவது இடத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள நேஷ்னல் இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.
4 ஆவது இடத்தில் திருநெல்வேலியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாக பொறியியல் கல்லூரி உள்ளது.
5 ஆவது இடத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி உள்ளது.
6 ஆவது இடத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள செயிண்ட் சேவியர் கத்தோலிக் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.
7 ஆவது இடத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரான்சிஸ் சேவியர் இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.
8 ஆவது இடத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரோகிணி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.
9 ஆவது இடத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.
10 ஆவது இடத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பொன் ஜெஸ்லி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil