நாட்டின் உயர்மட்ட பொறியியல் நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. விண்ணப்ப படிவங்கள் கிடைக்கக்கூடிய 10 பொறியியல் நுழைவுத் தேர்வுகள் இங்கே
ஒருகிணைந்த பொறியியல் முதன்மை நுழைவுத் தேர்வு (JEE Main) 2020 : ஜேஇஇ முதன்மை தேர்வின் இரண்டாவது முயற்சிக்கான விண்ணப்ப படிவம் பிப்ரவரி 7ம் தேதி முதல் மார்ச் 6ம் தேதி வரை கிடைக்கும். விண்ணப்ப படிவத்தை அதிகாரப்பூர்வ வலைத்தளமான jeemain.nta.nic.in இல் அணுகலாம். 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் 10 + 2 தகுதி பெற்றவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஜே.இ.இ மெயின் 2020 மதிப்பெண்கள் மூலம் மூலம் NITs, IIITs, CFTIs ஆகியவற்றில் யு.ஜி பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். மறுபுறம், IIT களில் பி.டெக் படிப்புகளில் சேர 2020 ஜேஇஇ முதன்மை தேர்வில் முதல் 2.5 லட்சம் இடத்திற்குள் வந்த தேர்வர்கள் ஜேஇஇ அட்வான்ஸ் 2020 தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
பிட்ஸ் சேர்க்கை சோதனை (BITSAT) 2020 : கோவா மற்றும் ஹைதராபாத்தில் உள்ள பிட்ஸ் பிலானி வளாகங்களில் பி.இ படிப்புகளில் சேருவதற்கானஅறிவிப்பை பிர்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனம் (பிட்ஸ்) வெளியிட்டுள்ளது. மார்ச் 31ம் தேதிக்குள் தேர்வர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிரார்கள். ஆன்லைன் தேர்வு மே 16 முதல் 25 வரை நாடு முழுவதும் நடைபெறும்.10 + 2 தேர்ச்சி பெற்ற / தோன்றும் தேர்வர்கள் இதற்கு விண்ணபிக்க தகுதியானவர்கள்
மணிப்பூர் நுழைவுத் தேர்வு (MET 2020 ) – மணிப்பூர் பல்கலைக்கழகம் தனது பி.டெக் படிப்புகளுக்கு மணிப்பால் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்களை அனுமதிக்கிறது. இந்த நுழைவுத் தேர்வு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்படுகிறது.10 + 2 தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் பதிவு செய்ய தகுதியானவர்கள். MET 2020 நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் படிக்க: இங்கே கிளிக் செய்யவும்
LPU தேசிய நுழைவு மற்றும் உதவித்தொகை சோதனை (LPU NEST) 2020 : லவ்லி நிபுணத்துவ பல்கலைக்கழகம் (LPU) ஏற்கனவே LPUNEST 2020 வழியாக தங்கள் சேர்க்கையின் ஒரு கட்டத்தை பூர்த்தி செய்துள்ளது. இருப்பினும், LPUNEST 2020 கட்டம் 2 க்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப படிவம் மார்ச் 31, 2020 வரை திறந்திருக்கும். இந்த LPUNEST நுழைவுத் தேர்வாகவும், மாணவர்களுக்கு உதவித்தொகை தேர்வாகவும் செயல்படுகிறது. nest.ipu.in என்ற இணையதளத்திற்கு சென்று தேர்வர்கள் விண்ணபிக்கலாம்.
அமிர்தா நுழைவுத் தேர்வு – பொறியியல் (AEEE) 2020 : அமிர்தா பல்கலைக்கழகத்தின் ஐந்து கேம்பஸ்களில் பி.டெக் படிப்புகளில் சேருவதற்காக தேர்வு AEEE ஆகும். தேர்வு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் நடத்தப்படுகிறது. தேர்வு தேதிகள் 2020
ஏப்ரல் 23 முதல் 27 வரை ஆன்லைன் நுழைவுத் தேர்வும், மே 2, அன்று பேப்பர் பேனா பயன்முறை தேர்வும் நடத்தபப்டுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமே பேனா-பேப்பர் தேர்வு மையம் அமைக்கப்படுகின்றது. மேலும் விவரங்களுக்கு amrita.edu என்ற இணையதளத்தை பார்க்கவும்.
மகாராஷ்டிரா பொது நுழைவுத் தேர்வு (MHT CET ) 2020 : மகாராஷ்டிரா மாநிலத்தின் கல்லூரிகளில் யுஜி வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்வி படிப்பில் சேருவதற்கான மாநில அளவிலான நுழைவுத் தேர்வு இது. விண்ணப்ப படிவம் ஆன்லைனில் மூலமே பெறப்படுகின்றன. இணையதளம் -mahacet.org. விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 29, 2020. தேர்வு ஏப்ரல் 13 முதல் 17 , 20 முதல் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும். 10 + 2 தேர்ச்சி பெற்ற / தோன்றும் தேர்வர்கள் இதற்கு விண்ணபிக்க தகுதியானவர்கள்.
உத்தரபிரதேச மாநில நுழைவுத் தேர்வு (UPSEE) 2020 : உத்தர பிரேதேச பல்கலைக் கழகங்களில் உள்ள பி.டெக் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை யுபிஎஸ்இ தேர்வு அடிப்படையில் நடத்தபப்டுகிறது. தேர்வர்கள் மார்ச் 15ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்வு மே மாதம் 10ம் தேதி நடைபெறும். 10 + 2 தேர்ச்சி பெற்ற / தோன்றும் தேர்வர்கள் இதற்கு விண்ணபிக்க தகுதியானவர்கள்.
கேரள பொறியியல் கட்டிடக்கலை மருத்துவம் (KEAM) 2020 : கேரள மாநில கல்லூரிகளில் யுஜி இன்ஜினியரிங் சேர்க்கை KEAM மதிப்பெண்ககள் அடிப்படையில் செய்யப்படுகிறார்கள் . பிப்ரவரி 25ம் தேதி வரையில் KEAM தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை நடைபெறும். விண்ணப்ப படிவங்கள் cee.kerala.gov.in இல் கிடைக்கின்றன. KEAM தேர்வு ஏப்ரல் 21, 22ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள, மும்பை, புது தில்லி, துபாய் உள்ள மையங்களில் தேர்வு நடத்தப்படும்.
கர்நாடகா பொது நுழைவுத் தேர்வு (கே.சி.இ.டி) 2020 : KCET 2020 தேர்வு வரும் ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும். மாநில அளவிலான இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் இரண்டாம் தேதி கடைசி நாளாகும். 10 + 2 தேர்ச்சி பெற்ற / தோன்றும் வேட்பாளர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணபிக்க வேண்டிய இணையதளம் cetonline.karnataka.gov.in . தேர்வு பேனா-பேப்பர் முறையில் மட்டுமே நடைபெறும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil