இ.சி.இ படிக்க காத்திருக்கிறீர்களா? இந்த ஸ்பெஷல் கோர்ஸ் படிச்சா நிறைய வேலைவாய்ப்பு; டாப் 15 காலேஜ் இதுதான்!
இ.சி.இ படிக்க காத்திருக்கிறீர்கள் என்றால், அந்த துறையில் இந்த ஸ்பெஷல் பிரிவை எடுத்து படிச்சா கை நிறைய சம்பளமும் வாங்கலாம் நிறைய வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்று தினேஷ் பிரபு கூறுகிறார். இ.சி.இ-யில் அது என்ன ஸ்பெசலைசேஷன் பிரிவு என்று விரிவாகப் பார்ப்போம் வாருங்கள்.
இ.சி.இ படிக்க காத்திருக்கிறீர்கள் என்றால், அந்த துறையில் இந்த ஸ்பெஷல் பிரிவை எடுத்து படிச்சா கை நிறைய சம்பளமும் வாங்கலாம் நிறைய வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்று தினேஷ் பிரபு கூறுகிறார். இ.சி.இ-யில் அது என்ன ஸ்பெசலைசேஷன் பிரிவு என்று விரிவாகப் பார்ப்போம் வாருங்கள்.
இந்த ஸ்பெஷல் பிரிவை எடுத்து படிச்சா கை நிறைய சம்பளமும் வாங்கலாம் நிறைய வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்று தினேஷ் பிரபு கூறுகிறார். இ.சி.இ-யில் அது என்ன ஸ்பெசலைசேஷன் பிரிவு என்று விரிவாகப் பார்ப்போம் வாருங்கள்.
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், சில மாணவர்கள் பொறியியலில் இ.சி.இ துறையில்தான் படிக்க வேண்டும் என காத்திருக்கிறார்கள். நீங்களும் அப்படி இ.சி.இ படிக்க காத்திருக்கிறீர்கள் என்றால், அந்த துறையில் இந்த ஸ்பெஷல் பிரிவை எடுத்து படிச்சா கை நிறைய சம்பளமும் வாங்கலாம் நிறைய வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்று தினேஷ் பிரபு கூறுகிறார். இ.சி.இ-யில் அது என்ன ஸ்பெசலைசேஷன் பிரிவு என்று விரிவாகப் பார்ப்போம் வாருங்கள்.
Advertisment
தினேஷ் பிரபு தனது யூடியூப் சேனலில் கூறுகையில், “படித்தால் இன்ஜினியரிங்கில் இ.சி.இ டிபார்ட்மெண்ட்தான் படிக்க வேண்டும் என காத்திருக்கிறீர்களா? இ.சி.இ டிபார்மெண்ட்டை விடவும் இ.சி.இ-யின் இன்னொரு ஸ்பெஷலைசேஷன் பிரிவு எடுத்து படிப்பதால் நிறைய சம்பளமும் அதிகமான வேலைவாய்ப்பும் இருக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அந்த படிப்பு பி.இ எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் வி.எல்.எஸ்.ஐ டிசைன் அண்ட் டெக்னாலஜி.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக் 21 பொறியியல் கல்லூரிகளில்தான் இந்த வி.எல்.எஸ்.ஐ டிசைன் அண்ட் டெக்னாலஜி கோர்ஸை சொல்லிக்கொடுக்கிறார்கள்.
Advertisment
Advertisements
செமி கண்டக்டர் இந்தியாவில் அதிகமாக வளர்ச்சி அடைந்துவரும் சூழ்நிலையில், கம்யூட்டர் கோர்ஸை விடவும் எலக்ட்ரானிக்ஸில் வி.எல்.எஸ்.ஐ டிசைன் டெக்னாலஜி கோர்ஸ் எடுத்து படிப்பது ரொம்ப சூப்பராக இருக்கும்.” என்று தினேஷ் பிரபு கூறுகிறார்.
மேலும், வி.எல்.எஸ்.ஐ டிசைன் அண்ட் டெக்னாலஜி கோர்ஸ் சொல்லித் தரும் டாப் 15 கல்லூரிகளை தினேஷ் பிரபு பட்டியலிட்டுள்ளார்.
1.காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் கிண்டி வளாகம் - கவுன்சிலிங் கோடு - 1
2.சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி - சி.ஐ.டி சென்னை - கவுன்சிலிங் கோடு - 1399
3.ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஆர்.ஐ.டி - கவுன்சிலிங் கோடு - 1432
4. அண்ணா பல்கலைக்கழகம் கோவை வளாகம், கவுன்சிலிங் கோடு - 2025
5.ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், கவுன்சிலிங் கோடு - 2710
6.கற்பகம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை - கவுன்சிலிங் கோடு - 2710
7.கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கவுன்சிலிங் கோடு - K82750
8.பி.எஸ்.என்.ஏ காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திண்டுக்கல்- கவுன்சிலிங் கோடு - 5910
9.டாக்டர் மகாலிக்கம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, பொள்ளாச்சி - கவுன்சிலிங் கோடு - 2706
10. வேலம்மாள் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, மதுரை - கவுன்சிலிங் கோடு - 5986
11.ஆர்.எம்.கே காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் டெக்னாலஜி, சென்னை - கவுன்சிலிங் கோடு - 1128
12.ஜே.என்.என் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் - கவுன்சிலிங் கோடு - 1126
13. அண்ணா பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி வளாகம், பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி - கவுன்சிலிங் கோடு - 3011
14.எம். குமாரசாமி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கரூர் - கவுன்சிலிங் கோடு - 2608
15. பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளையிடு ரிசர்ச், கவுன்சிலிங் கோடு - 2377
இந்த டாப் 15 கல்லூரிகளில் நீங்கள் வி.எல்.எஸ்.ஐ டிசைன் டெக்னாலஜி கோர்ஸ் எடுத்து படிக்கலாம். ஆனால், இந்த ஆண்டு ஒரு சில கல்லூரிகளில் இந்த கோர்ஸைக் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறார்கள்.” என்று தினேஷ் பிரபு கூறியுள்ளார்.