scorecardresearch

TNEA Counselling; தமிழக டாப் 25 பொறியியல் கல்லூரிகள் இவை தான்!

பொறியியல் படிக்க விருப்பமா? தமிழகத்தில் உள்ள டாப் 25 இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல் இங்கே

TNEA Counselling; தமிழக டாப் 25 பொறியியல் கல்லூரிகள் இவை தான்!

Top 25 Engineering colleges list under Anna University in Tamilnadu: பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய தமிழகத்தில் உள்ள டாப் 25 என்ஜீனியரிங் கல்லூரிகள் எவை என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கையை, அண்ணாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. இந்த பொறியியல் படிப்புகளுக்கு https://www.tneaonline.org/ என்ற இணையதளப் பக்கம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்: ஹிட் லிஸ்டில் 200 பொறியியல் கல்லூரிகள்; ஜூலை 16 டெட்லைன்: அண்ணா பல்கலை கறார்

பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறும். உங்களுடைய விண்ணப்பம் ஏற்றக் கொள்ளப்பட்ட பின்னர், நீங்கள் கல்லூரிகளை தேர்வு செய்ய மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதாவது உங்களுக்கான தரவரிசை வெளியிடப்பட்ட பின்னர், நீங்கள் ஆன்லைனில், நீங்கள் விரும்பும் கல்லூரிகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்துக் கொள்ளலாம். அதன்பிற்கு உங்களுடைய கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு ஏற்ப உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த கல்லூரிகளில் இருந்து ஓதுக்கீடு செய்யப்படும்.

தற்போது தமிழகத்தின் டாப் 25 பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம். கல்வியாளர் ரமேஷ்பிரபா தனது யூடியூப் சேனலில் தமிழகத்தில் உள்ள டாப் கல்லூரிகள் எவை என பட்டியலிட்டுள்ளார்.

இந்த டாப் 25 பொறியியல் கல்லூரிகளின் தரவரிசையானது, அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள கல்லூரி முன்னுரிமை பட்டியல் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 வருடங்களில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளில் பொதுப்பிரிவினருக்கு கட் ஆஃப் மதிப்பெண்களின் சராசரி அடிப்படையில் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டாப் 25 கல்லூரிகளைப் பொறுத்தவரை, சென்னையில் உள்ள அண்ணாப் பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி முதலிடத்தில் உள்ளது.

2 ஆம் இடத்தில், குரோம்பேட்டையில் உள்ள அண்ணாப் பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸ் உள்ளது.

3 ஆவது இடத்தில் கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.

4 ஆவது இடத்தில் எஸ்.எஸ்.என் என அழைக்கப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி உள்ளது.

5 ஆவது இடத்தில் கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.

6 ஆவது இடத்தில் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி உள்ளது.

7 ஆவது இடத்தில் கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்ப கல்லூரி உள்ளது.

8 ஆவது இடத்தில் கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச் உள்ளது.

9 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.

10 ஆவது இடத்தில் கோயம்புத்தூரில் உள்ள குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.

11 ஆவது இடத்தில் சேலத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி உள்ளது.

12 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள லயோலா ICAM இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

13 ஆவது இடத்தில் கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.

14 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள செயிண்ட் ஜோசப் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.

15 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

16 ஆவது இடத்தில் காரைக்குடியில் உள்ள அழகப்பா செட்டியார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.

17 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

18 ஆவது இடத்தில் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி உள்ளது.

19 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் ராஜலட்சுமி இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

20 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ராஜலட்சுமி இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

21 ஆவது இடத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கொங்கு இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

22 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள மீனாட்சி சுந்தர்ராஜன் இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

23 ஆவது இடத்தில் கோயம்புத்தூரில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாக கல்லூரி உள்ளது.

24 ஆவது இடத்தில் சிவகாசியில் உள்ள மெப்கோ (Mepco Schlenk) கல்லூரி உள்ளது.

25 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள சென்னை இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.

இந்த பட்டியல் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு கட் ஆஃப் அடிப்படையில் உள்ளதால், வேறு முக்கிய பாடப்பிரிவுகளைக் கொண்டுள்ள டாப் கல்லூரிகளான காரைக்குடி சிக்ரி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏ.சி.டெக் கேம்பஸ் உள்ளிட்ட கல்லூரிகள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Top 25 engineering colleges list under anna university in tamilnadu