TNEA 2025: என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை முதல் பிளேஸ்மெண்ட் வரை; தமிழக டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள் இவைதான்!

கடந்த ஆண்டு என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை, மாணவர்களின் ஆவரேஜ் கட் ஆஃப் மற்றும் வேலை வாய்ப்பு அடிப்படையில் தமிழ்நாட்டில் டாப் 30 இடங்களில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் இங்கே

கடந்த ஆண்டு என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை, மாணவர்களின் ஆவரேஜ் கட் ஆஃப் மற்றும் வேலை வாய்ப்பு அடிப்படையில் தமிழ்நாட்டில் டாப் 30 இடங்களில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Engineering Students

TNEA 2025: தமிழக டாப் 30 இன்ஜினியரிங் கல்லூரிகள் இவைதான்!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது. மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் அதிகமானோர் பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Advertisment

பொறியியல் படிப்புகளைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேநேரம் கோர் படிப்புகளான சிவில், எலக்ட்ரிக்கல் படிப்புகளுக்கு எப்போதும் மவுசு உள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில் சிறந்த வேலை வாய்ப்பு எதிர்காலம் இருப்பதால் இந்தப் படிப்புகளை படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தநிலையில், கடந்த ஆண்டு என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை, மாணவர்களின் ஆவரேஜ் கட் ஆஃப் மற்றும் வேலை வாய்ப்பு அடிப்படையில் தமிழ்நாட்டில் டாப் 30 இடங்களில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை இந்தப் பதிவில் அறிந்து கொள்ளலாம். இதனை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.

முழுமையான பட்டியல் பின்வருமாறு:

Advertisment
Advertisements

1). அண்ணா பல்கலைக்கழக சி.இ.ஜி கேம்பஸ், சென்னை

2). அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி கேம்பஸ், சென்னை

3). எஸ்.எஸ்.என் எனப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை 

4). பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை

5). சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, காஞ்சிபுரம்

6). கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம், கோவை

7). பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச், கோவை

8). அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை 

9). தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை

10). ராஜலெட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

11). ராஜலெட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை 

12). குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை 

13). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை

14). ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை 

15). ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை 

16). ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், காஞ்சிபுரம் 

17). சவீதா இன்ஜினியரிங் காலேஜ், சென்னை 

18). அரசு பொறியியல் கல்லூரி, சேலம்

19). கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை

20). பி.எஸ்.என்.ஏ காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திண்டுக்கல் 

21). பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈரோடு

22). கொங்கு இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு 

23). ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

24). லயோலா ஐகேம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை

25). கே.ஐ.டி கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை

26). பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை 

27). கற்பகம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோயம்புத்தூர்

28). ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ், கோவை

29). அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், காரைக்குடி

30). ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை 

Engineering Counselling Educational News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: