/indian-express-tamil/media/media_files/2025/03/15/3QirQkkhe83d3qcBqnZw.jpg)
தமிழக டாப் 40 பொறியியல் கல்லூரிகள்
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கையை, அண்ணாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. இந்த பொறியியல் படிப்புகளுக்கு https://www.tneaonline.org/ என்ற இணையதளப் பக்கம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் தற்போது 12-ம் வகுப்பு தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. மே மாதத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டு, ஜூன், ஜூலை மாதங்களில் உயர் கல்வி சேர்க்கை நடைபெறும். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பொறியியல் படிப்புக்கு நல்ல மவுசு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தின் டாப் 40 பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பட்டியலிட்டுள்ளார்.
40-ஆவது இடத்தில் சிவகாசியில் உள்ள மெப்கோ ஸ்லங் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது (4960) (விருதுநகர்) (சராசரி 164.07)
39-வது இடத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.என்.ஏ. இன்ஜினியரிங் கல்லூரி (5910) (மதுரை மண்டலம்) (சராசரி 165.61)
38-வது இடத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி (1128) (சென்னை மண்டலம்) (சராசரி 165.89)
37-வது இடத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி (1414) (சென்னை மண்டலம்) (சராசரி 167.01)
36-வது இடத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஜோசப் பொறியியல் கல்லூரி (1317) (சென்னை மண்டலம்) (சராசரி 168.05)
35-வது இடத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி (2719) (கோவை மண்டலம்) (சராசரி 168.11)
34-வது இடத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நேஷனல் பொறியியல் கல்லூரி (4962) (நெல்லை மண்டலம்) (சராசரி 168.71)
33-வது இடத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரி (2711) (கோவை மண்டலம்) (சராசரி 168.97)
32-வது இடத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி (1419) (சென்னை மண்டலம்) (சராசரி 170.03 )
31-வது இடத்தில் சென்னையில் உள்ள ஈஸ்வரி பொறியியல் கல்லூரி (1304) (சென்னை மன்டலம்) (சராசரி 170.16)
30-வது இடத்தில் ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள சவிதா பொறியியல் கல்லூரி (1216) (சென்னை மண்டலம்) (சராசரி 170.21)
29-வது இடத்தில் ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி (2709) (கோவை மண்டலம்) (சராசரி 171.29)
28-வது இடத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம்.டி. பொறியியல் கல்லூரி (1112) (சென்னை மண்டலம்) (சராசரி 172)
27-வது இடத்தில் கிருஷ்ணகிரி அரசு பொறியியல் கல்லூரி (2603) (கோவை மண்டலம்) (சராசரி 173.28)
26-வது இடத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பன்னாரி அம்மன் கல்லுரி (2702) (கோவை மண்டலம்) (சராசரி 173.75)
25-வது இடத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி (2722) (கோவை மண்டலம்) (சராசரி 174.70)
24-வது இடத்தில் நெல்லை அரசு பொறியியல் கல்லூரி (4974) (நெல்லை மண்டலம்) (சராசரி 175.69 )
23-வது இடத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரி (2710) (கோவை மண்டலம்) (சராசரி 176.00)
22-வது இடத்தில் ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள ஸ்ரீவெங்கடேஷ்வரா பொறியியல் கல்லூரி (1219) (சென்னை மண்டலம்) (சராசரி 176.54)
21-வது இடத்தில் திருவள்ளூரில் உள்ள ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி (1113) (சென்னை மண்டலம்) (சராசரி 176.74)
20-வது இடத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி (2764) (கோவை மண்டலம்) (சராசரி 177.77)
19-வது இடத்தில் சென்னையில் உள்ள ராஜலட்சுமி தொழில்நுட்ப கல்லூரி (1432) (சென்னை மண்டலம்) (சராசரி 177.79)
18-வது இடத்தில் சேலம் அரசு பொறியியல் கல்லூரி (2615) (கோவை மண்டலம்) (சராசரி 177.91)
17-வது இடத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி (5901) (மதுரை மண்டலம்) (சராசரி 177.93)
16-வது இடத்தில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏ.சி.டி. கேம்பஸ் (2) (சென்னை மண்டலம்) (சராசரி 178.48)
15-வது இடத்தில் சென்னை லயோலா-ஐ.சி.ஏ.எம். பொறியியல் கல்லூரி (1450) (சென்னை மண்டலம்) (சராசரி 179.15)
14-வது இடத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி (1211) (சென்னை மண்டலம்) (சராசரி 179.34)
13-வது இடத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஈஸ்வர் பொறியியல் கல்லூரி (2739) (கோவை மண்டலம்) (சராசரி 179.36)
12-வது இடத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரி (2718) (கோவை மண்டலம்) (சராசரி 181.45)
11-வது இடத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி (2712) (கோவை மண்டலம்) (சராசரி 182.12)
10-வது இடத்தில் கோவை அரசு பொறியியல் கல்லூரி (2005) (கோவை மண்டலம்) (சராசரி 183.64)
9-வது இடத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரி (5008) (மதுரை மண்டலம்) (சராசரி 186.83)
8-வது இடத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி (2377) (கோவை மண்டலம்) (சராசரி 188.60)
7-வது இடத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள கோவை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி (2007) (கோவை மண்டலம்) (சராசரி 189.14)
6-வது இடத்தில் சென்னையில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி (1399) (சென்னை மண்டலம்) (சராசரி 187.55)
5-வது இடத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லுரி (2006) (கோவை மண்டலம்) (சராசரி 186.51)
4-வது இடத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசிவசுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி (1315) (சென்னை மண்டலம்) (சராசரி 191.87)
3-வது இடத்தில் காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் கல்லூரி (5012) (மதுரை மண்டலம்) (சராசரி 191.90)
2-வது இடத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸ் (4) (சென்னை மண்டலம்) (சரசாசரி 192.66)
முதல் இடத்தில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் சி.இ.ஜி கேம்பஸ் உள்ளது. (1) (சராசரி 192.23)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.