அண்ணா பல்கலைகழகம், மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு, இஞ்ஜினியரிங் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகின்றன.
2018ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில், மாணவர்களின் தேர்ச்சிவிகிதத்தை கொண்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முதல் 5 கல்லூரிகள் இங்கே தரப்பட்டுள்ளன.
1. ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் காலேஜ் ஆப் இஞ்ஜினியிரிங் (TNEA code 1315)
ஏப்ரல், மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வில் 3635 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 3146 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி சதவீதம் 86.55 சதவீதம் ஆகும்.
2. ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி (TNEA code 1324)
செமஸ்டர் தேர்வில் 2493 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 2141 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்ச்சி விகிதம் 85.88 சதவீதம் ஆகும்.
3. ஸ்ரீ சாய்ராம் இஞ்ஜிஜனியரிங் காலேஜ் (TNEA code 1419)
செமஸ்டர் தேர்வில் 4417 மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். இவர்களில் 3730 மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருந்தனர். தேர்ச்சி விகிதம் 84.45 சதவீதம் ஆகும்.
அண்ணா பல்கலைகழகத்தின் டாப் 10 இஞ்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல்
4. ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் (TNEA code 1219)
செமஸ்டர் தேர்வில் 2112 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர். இவர்களில் 1644 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்ச்சி விகிதம் 77.84 சதவீதம் ஆகும்.
5. சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி (TNEA code 1399)
செமஸ்டர் தேர்வில் 2341 மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தனர். இவர்களில், 1815 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்ச்சி விகிதம் 77.53 சதவீதம் ஆகும்.