இந்திய அரசின் முக்கிய கல்வி உதவித் தொகை திட்டத்தின் சிலவற்றை இங்கே காணலாம்.
தேசிய அளவிலான தகுதி-வழியுதவி கல்வி உதவித் தொகைத் திட்டம்:
தேசிய அளவிலான தகுதி-வழியுதவி கல்வி உதவித் தொகைத் திட்டம் (National Means-cum-Merit Scholarship Scheme (NMMSS) )2008 மே மாதம் தொடங்கப்பட்டது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சார்ந்த திறமையான மாணவர்கள் எட்டாம் வகுப்புக்குப் பிறகு படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்ற நோக்கில் இத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது.
இத்திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்படுகிற மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000/- என்ற கணக்கில் ஆண்டுக்கு பன்னிரெண்டாம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாநில அரசுப்பள்ளி அல்லது அரசின் உதவி பெறும் பள்ளி அல்லது உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்க இந்த உதவித் தொகை கிடைக்கும். ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் வரை பயன்பெரும் இத்திட்டத்தில் சேர, எட்டாம் வகுப்புத் தேர்வில் 55 சதவீதத்திற்கும் குறையாமல் (ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணவர்களுக்கு 50) மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
PMS-OBC உதவித்தொகை திட்டம்:
‘இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்டோர்க்கு பத்தாம் வகுப்புக்கு மேல் கல்வி தொடர உதவித் தொகை’ (PMS-OBC) எனக் குறிப்பிடப்படும் இந்த உதவித் தொகைத் திட்டம் பெற்றோர்களது ஆண்டு வருவாய் ரூ. 1.5 லட்சமாக குறைவாக உள்ள மணாவர்களுக்கு வழங்கப்படுகிறது . இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 30 சதவீதம் தொகை மாணவியருக்கும் 5 சதவீதம் மாற்றுத் திறனாளிகளுக்கும் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளியிறுதி வகுப்புக்கு முந்தைய கல்வி உதவித் தொகை திட்டம்: (Post-Matric Scholarship for Students with Disabilities )
மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவருக்கும், 9,10,11,12 வகுப்புகளில் படிப்பதற்கும் பின்னர் டிப்ளமோ (பட்டயம்), பட்டம், முதுநிலைப் பட்டம் ஆகியவற்றைப் படிப்பதற்கும் இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாதாந்திர கல்வி உதவித் தொகை, பாட நூல்கள் வாங்குவதற்கான ஊக்கத் தொகை, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித் தொகை நிதி போன்றவைகள் இத்திட்டன் கீழ் கொடுக்கப்படுகின்றன.
மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
Post-Graduate Indira Gandhi Scholarship for Single Girl Child உதவித்தொகை திட்டம்:
முதுகலை படிப்பை மேற்கொள்ளும் பெண்களுக்காக இந்திரா காந்தி ஒற்றைப் பெண் குழந்தைக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், மாணவியருக்கு ஆண்டுக்கு ரூபாய் 36,200 உதவித் தொகையாக வழங்கப்படும் என்று யுஜிசி தெரிவித்தது.
மேலும், விவரங்களுக்கு யுஜிசி இணையதளத்தை அணுகலாம்.
எஸ்சி / எஸ்டிக்கு முதுநிலை தொழில்முறைக் கல்வி ஊக்கத்தொகை (professional courses)
பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் (யுஜிசி) செயல்படுத்தப்படும் இந்த திட்டம், எஸ்சி / எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாணவர்களை முதுகலை அளவில் தொழில்முறை படிப்புகளைத் தொடர ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நடப்பு கல்வியாண்டின்,முதல் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகைக்குவிண்ணப்பிக்கலாம். மாதத்திற்கு 7,800 வரை ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
கூடுதல், விவரங்களுக்கு யுஜிசி இணையதளத்தை அணுகலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.