/tamil-ie/media/media_files/uploads/2023/04/engineering-college.jpg)
தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சிறந்த 25 கல்லூரிகள் எவை என்பதை இப்போது தெரிந்துக் கொள்வோம்.
மருத்துவம், பொறியியல், விவசாயம், கால்நடை மருத்துவம், மீன்வளம் போன்ற படிப்புகளுக்கு எப்போதும் ஆர்வம் இருக்கும். மறுபுறம் கலை மற்றும் அறிவியல் சார்ந்த பட்டப்படிப்புகளை படிக்கவும் மாணவர்கள் விரும்புகின்றனர். குறிப்பாக ஆசிரியர் பணி, அரசு வேலை போன்றவற்றை நோக்கமாக கொண்டவர்கள் இந்த கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர்க்கை பெறுகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டாப் 25 கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம். யு.கே.வி தமிழா என்ற யூடியூப் சேனலில் இந்தக் கல்லூரிகளின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை 2024 அடிப்படையில் இந்தக் கல்லூரிகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
1). பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி, கோயம்புத்தூர்
2). லயோலா கல்லூரி, சென்னை
3). பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
4). பிரசிடென்சி கல்லூரி, சென்னை
5). மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ், சென்னை
6). தியாகராசர் கல்லூரி, மதுரை
7). செயிண்ட் ஜோசப் கல்லூரி, திருச்சி
8). வ.உ.சிதம்பரம் கல்லூரி, தூத்துக்குடி
9). ஸ்டெல்லா மேரீஸ் பெண்கள் கல்லூரி, சென்னை
10). பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி
11). செயிண்ட் சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி
12). ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
13). ஹோலி கிராஸ் காலேஜ், திருச்சி
14). நேசமணி நினைவு கிறிஸ்டியன் கல்லூரி, மார்த்தாண்டம், கன்னியாகுமரி
15). தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரம்பலூர்
16). ஷேக்ரெட் ஹார்ட் காலேஜ், திருப்பத்தூர்
17). கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
18). தி அமெரிக்கன் காலேஜ், மதுரை
19). ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
20). ஜமால் முகமது கல்லூரி, திருச்சி
21). அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி
22). உமன் கிறிஸ்டியன் காலேஜ், சென்னை
23). அரசு கலைக் கல்லூரி, கோயம்புத்தூர்
24). குயின் மேரீஸ் காலேஜ், சென்னை
25). சென்னை சமூக அறிவியல் பள்ளி, சென்னை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.