தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மோகம் மீண்டும் திரும்பியுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக, ஏற்பட்டுள்ள அதிக வேலைவாய்ப்புகளால், பொறியியல் படிப்பில் சேர அதிகமானவர்கள் விரும்புகிறார்கள். இந்தநிலையில், மாணவர்கள் அதிகம் விரும்பும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய சென்னை மண்டலத்தில் உள்ள டாப் பொறியியல் கல்லூரிகள் எவை? என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அடுத்ததாக என்ன படிக்க வேண்டும் என்பதை, தேர்வு முடிந்த உடனே தீர்மானிக்க வேண்டி வரும். தமிழகத்தில் தற்போது பெரும்பாலானவர்கள் பொறியியல் படிக்க விரும்புகின்றனர். எனவே பொறியியலில் சேர விரும்புவோர்கள், தமிழகத்தில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை தெரிந்துக் கொள்வது நல்லது.
இதையும் படியுங்கள்: பி.எஸ்.ஜி, சி.ஐ.டி… கோவை, திருப்பூர், ஈரோட்டில் டாப் பொறியியல் கல்லூரிகள் எவை?
இந்தநிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய சென்னை மண்டலத்தில் டாப் பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம். கல்வியாளர் அஸ்வின் சென்னை பகுதியில் உள்ள டாப் கல்லூரிகள் எவை என்பதை தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
கல்லூரிகளுக்கு மாணவர்கள் அளிக்கும் முன்னுரிமை, ஆவரேஜ் கட் ஆஃப், இடங்கள் நிரப்பப்படும் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் டாப் கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், முதன்மை பொறியியல் படிப்புகளான கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி, இ.சி.இ, இ.இ.இ, சிவில், மெக்கானிக்கல் போன்ற படிப்புகளுக்கான ஆவரேஜ் கட் ஆஃப் அடிப்படையில், இந்த பட்டியல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
1). அண்ணாப் பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை
2). அண்ணாப் பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸ், குரோம்பேட்டை, சென்னை
3). எஸ்.எஸ்.என் என அழைக்கப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, காலவாக்கம், செங்கல்பட்டு
4). சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, குன்றத்தூர், செங்கல்பட்டு
5). ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்கசர் அண்ட் ப்ளானிங், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
6). ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், திருவள்ளூர்
7). லயோலா ஐகேம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை
8). ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், காஞ்சிபுரம்
9). அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏ.சி.டெக் கல்லூரி, சென்னை
10). ராஜலட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், காஞ்சிபுரம்
11). ராஜலெட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, காஞ்சிபுரம்
12). ஆர்.எம்.டி இன்ஜினியரிங் காலேஜ், திருவள்ளூர்
13). ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
14). ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
15). ஆர்.எம்.கே காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திருவள்ளூர்
16). ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை
17). செயிண்ட் ஜோசப் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை
18). செயிண்ட் ஜோசப் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை
19). சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பெட்ரோகெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை
20). சவீதா இன்ஜினியரிங் காலேஜ், காஞ்சிபுரம்.
இவைதவிர காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஜேப்பியர் இன்ஜினியரிங் காலேஜ், எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை இன்ஜினியரிங் காலேஜ், கே.சி.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, ஜேப்பியர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, காஞ்சிபுரம் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி ஆகியவை உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில், பனிமலர் இன்ஜினியரிங் காலேஜ், வேல் டெக் மல்டி டெக் இன்ஜினியரிங் காலேஜ், வேலம்மாள் இன்ஜினியரிங் காலேஜ், வேல் டெக் ஹை டெக் இன்ஜினியரிங் காலேஜ், வேலம்மாள் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி ஆகியவை உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அக்னி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கற்பகவிநாயகா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ஆகியவை உள்ளன.
சென்னை மாவட்டத்தில், மீனாட்சி சுந்தர்ராஜன் இன்ஜினியரிங் காலேஜ், பனிமலர் இன்ஜினியரிங் காலேஜ், மீனாட்சி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் ஆகியவை உள்ளன.
மாணவர்கள் இந்தக் கல்லூரிகளை தேர்வு செய்யும் முன்னர், உங்களுக்கு விருப்பமான கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று, அவர்களின் தரவரிசை, உள்கட்டமைப்பு வசதிகள், வேலைவாய்ப்பு, கல்வி கட்டணம் போன்றவற்றை தெரிந்துக் கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.