தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மோகம் மீண்டும் திரும்பியுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக, ஏற்பட்டுள்ள அதிக வேலைவாய்ப்புகளால், பொறியியல் படிப்பில் சேர அதிகமானவர்கள் விரும்புகிறார்கள். இந்தநிலையில், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய கோவை மண்டலத்தில் உள்ள டாப் பொறியியல் கல்லூரிகள் எவை? என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அடுத்ததாக என்ன படிக்க வேண்டும் என்பதை, தேர்வு முடிந்த உடனே தீர்மானிக்க வேண்டி வரும். தமிழகத்தில் தற்போது பெரும்பாலானவர்கள் பொறியியல் படிக்க விரும்புகின்றனர். எனவே பொறியியலில் சேர விரும்புவோர்கள், தமிழகத்தில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை தெரிந்துக் கொள்வது நல்லது.
இதையும் படியுங்கள்: JEE Main 2023; ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு இப்படி தயாராகுங்கள்; டாப்பர்களின் சூப்பர் டிப்ஸ்
இந்தநிலையில், கோவை, திருப்பூர், ஈரோடு
கல்லூரிகளுக்கு மாணவர்கள் அளிக்கும் முன்னுரிமை, ஆவரேஜ் கட் ஆஃப், இடங்கள் நிரப்பப்படும் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் டாப் கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், முதன்மை பொறியியல் படிப்புகளான கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி, இ.சி.இ, இ.இ.இ, சிவில், மெக்கானிக்கல் போன்ற படிப்புகளுக்கான ஆவரேஜ் கட் ஆஃப் அடிப்படையில், இந்த பட்டியல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
1). பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர்<
2). கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி
3). பி.எஸ்.ஜி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர்
4). அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்
5). குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர்
6). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோயம்புத்தூர்
7). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர்
8). அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், கோயம்புத்தூர்
9). ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோயம்புத்தூர்
10). பண்ணாரி அம்மன் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈரோடு
11). கொங்கு இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு
12). ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ், கோயம்புத்தூர்
13). அரசு பொறியியல் கல்லூரி, ஈரோடு
இந்த கல்லூரிகள் கவுன்சிலிங்கில் அதிக செயல்திறனுடன், மாணவர்கள் அதிகம் விரும்பும், அதிக ஆவரேஜ் கட் ஆஃப் உடைய கல்லூரிகளாக உள்ளன.
இவை தவிர, கோயம்புத்தூர் பகுதியில், கற்பகம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, டாக்டர் மகாலிங்கம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கற்பகம் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, KGISL இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, Dr.NGP இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, எஸ்.என்.எஸ் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், எஸ்.என்.எஸ் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, ரத்தினம் டெக்னிக்கல் கேம்பஸ், ஹிந்துஸ்தான் எஸ்.என்.எஸ் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, வி.எஸ்.பி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் டெக்னிக்கல் கேம்பஸ், தமிழ்நாடு காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் ஆகியவை உள்ளன.
ஈரோடு பகுதியில், வேளாளர் காலேஜ் ஆஃப் இன்ஜினிரியங் அண்ட் டெக்னாலஜி, நந்தா இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு செங்குந்தர் இன்ஜினியரிங் காலேஜ், நந்தா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி ஆகியவை உள்ளன.
திருப்பூர் பகுதியில், பில்டர்ஸ் இன்ஜினியரிங் காலேஜ், ஜெய் ஸ்ரீராம் இன்ஜினியரிங் காலேஜ், சசூரி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் ஆகியவை உள்ளன.
மாணவர்கள் இந்தக் கல்லூரிகளை தேர்வு செய்யும் முன்னர், உங்களுக்கு விருப்பமான கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று, அவர்களின் தரவரிசை, உள்கட்டமைப்பு வசதிகள், வேலைவாய்ப்பு, கல்வி கட்டணம் போன்றவற்றை தெரிந்துக் கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil