தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மவுசு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக, ஏற்பட்டுள்ள அதிக வேலைவாய்ப்புகளால், பொறியியல் படிப்பில் சேர அதிகமானவர்கள் விரும்புகிறார்கள். இந்தநிலையில், கோவை மண்டலத்தில் உள்ள டாப் பொறியியல் கல்லூரிகள் எவை? என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் பொறியியல் கவுன்சிலிங்கிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 2 ஆவது வாரத்தில் முதல் சுற்று கலந்தாய்வு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், நீலகிரி ஆகிய 9 மாவட்டங்கள் அடங்கிய கோவை மண்டலத்தில் டாப் பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம். கல்வியாளர் அஸ்வின் கோவை பகுதியில் உள்ள டாப் கல்லூரிகள் எவை என்பதை தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு முதல் ரவுண்ட் கவுன்சிலிங்கிற்கு 184.5 முதல் 200 வரை உள்ளவர்கள் அழைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 183.5 முதல் 200 வரை உள்ளவர்கள் அழைக்கப்படலாம் எனத் தெரிகிறது.
Advertisment
Advertisement
கல்லூரிகளுக்கு மாணவர்கள் அளிக்கும் முன்னுரிமை, ஆவரேஜ் கட் ஆஃப், இடங்கள் நிரப்பப்படும் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் டாப் கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், முதன்மை பொறியியல் படிப்புகளான கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி, இ.சி.இ, இ.இ.இ, சிவில், மெக்கானிக்கல் போன்ற படிப்புகளுக்கான ஆவரேஜ் கட் ஆஃப் அடிப்படையில், இந்த பட்டியல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
1). பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர்
2). கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி
3). அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்
4). பி.எஸ்.ஜி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர்
5). குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர்
6). அரசு பொறியியல் கல்லூரி, சேலம்
7). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோயம்புத்தூர்
8). ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோயம்புத்தூர்
9). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர்
10). பண்ணாரி அம்மன் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈரோடு
11). கொங்கு இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு
12). அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், கோயம்புத்தூர்
13). ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ், கோயம்புத்தூர்
14). கற்பகம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோயம்புத்தூர்
இந்த கல்லூரிகள் கவுன்சிலிங்கில் அதிக செயல்திறனுடன், மாணவர்கள் அதிகம் விரும்பும், அதிக ஆவரேஜ் கட் ஆஃப் உடைய கல்லூரிகளாக உள்ளன.
மாணவர்கள் இந்தக் கல்லூரிகளை தேர்வு செய்யும் முன்னர், உங்களுக்கு விருப்பமான கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று, அவர்களின் தரவரிசை, உள்கட்டமைப்பு வசதிகள், வேலைவாய்ப்பு, கல்வி கட்டணம் போன்றவற்றை தெரிந்துக் கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil