பொறியியல் கவுன்சலிங் ரவுண்ட் -1: மதுரை, திருச்சி, சேலம் பகுதிகளில் டாப் கல்லூரிகள் இவைதான்!
TNEA Counselling: பொறியியல் படிக்க விருப்பமா? மதுரை, திருச்சி, சேலம், கரூர், ஈரோடு பகுதிகளில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை தெரியுமா? ரவுண்ட் 1க்கு நீங்கள் இந்த கல்லூரிகளை தேர்வு செய்யலாம்
TNEA Counselling: பொறியியல் படிக்க விருப்பமா? மதுரை, திருச்சி, சேலம், கரூர், ஈரோடு பகுதிகளில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை தெரியுமா? ரவுண்ட் 1க்கு நீங்கள் இந்த கல்லூரிகளை தேர்வு செய்யலாம்
Top Engineering colleges in Madurai, Trichy, Salem under Anna University for round 1 counselling: பொறியியல் படிப்புகளுக்கான ரேங்க் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொறியியல் படிக்க மாணவர்களிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதனால் டாப் பொறியியல் கல்லூரிகளில் இடங்களை பிடிக்க கடுமையான போட்டி இருக்கும் என தெரிகிறது. இந்த நிலையில், சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக பொறியியல் கவுன்சிலிங் ரவுண்ட் 1ல் திருச்சி, மதுரை, சேலம், கரூர், ஈரோடு பகுதிகளில் உள்ள டாப் பொறியியல் கல்லூரிகள் எவை? போன்ற தகவல்களை இப்போது பார்ப்போம்.
Advertisment
கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி திருச்சி, மதுரை, சேலம், கரூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் உள்ள டாப் கல்லூரிகள் எவை என்பதை தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
கல்லூரிகளுக்கு மாணவர்கள் அளிக்கும் முன்னுரிமை, ஆவரேஜ் கட் ஆஃப், இடங்கள் நிரப்பப்படும் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் டாப் கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இவை பொறியியல் கவுன்சலிங் ரவுண்ட் 1ற்கான திருச்சி, மதுரை, சேலம், கரூர், ஈரோடு பகுதிகளில் உள்ள டாப் கல்லூரிகள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
Advertisment
Advertisements
நீங்கள் முதல் ரவுண்ட்க்கான கவுன்சிலிங்கிற்கு தகுதி பெற்று, சென்னை மற்றும் கோவைப் பகுதியில் உள்ள கல்லூரிகளில் இடங்கள் கிடைக்க வில்லை அல்லது விருப்பமில்லை அல்லது திருச்சி, மதுரை, சேலம், கரூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் சேர விருப்பம் என்றால் கீழ்கண்ட கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம்.
முதலில் ஈரோட்டில் உள்ள கொங்கு இன்ஜினியரிங் காலேஜ்க்கு முன்னுரிமை கொடுக்கலாம். அடுத்து சேலத்தில் உள்ள சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜிக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.
அடுத்து திருச்சி பகுதியில் சாரநாதன் இன்ஜினியரிங் காலேஜ், கே.ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ், எஸ்.ஆர்.எம் டி.ஆர்.பி இன்ஜினியரிங் காலேஜ் ஆகியவை டாப் கல்லூரிகளாக உள்ளன.
அடுத்து கரூர் பகுதியில் வி.எஸ்.பி இன்ஜினியரிங் காலேஜ், எம்.குமாரசுவாமி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் ஆகியவை உள்ளன.
மதுரையைப் பொறுத்தவரை முதலிடத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி உள்ளது. அடுத்த இடங்களில் சிவகாசியில் உள்ள மெப்கோ இன்ஜினியரிங் காலேஜ், மதுரை வேலம்மாள் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவில்பட்டி நேஷ்னல் இன்ஜினியரிங் காலேஜ் ஆகியவை உள்ளன.
மாணவர்கள் இந்தக் கல்லூரிகளை தேர்வு செய்யும் முன்னர், உங்களுக்கு விருப்பமான கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று, அவர்களின் தரவரிசை, உள்கட்டமைப்பு வசதிகள், வேலைவாய்ப்பு, கல்வி கட்டணம் போன்றவற்றை தெரிந்துக் கொள்ளுங்கள்.