சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் ஒன்பதாவது பதிப்பின்படி, தமிழகத்தில் உள்ள டாப் 10 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை இப்போது பார்ப்போம்.
பொறியியல் படிப்புகளுக்கான ஆர்வம் சமீபகாலமாக அதிகரித்து உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர அதிகமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையில் உள்ள போட்டியின் அளவே, எந்த அளவிற்கு மாணவர்கள் பொறியியல் படிக்க விரும்புகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
இந்தநிலையில், தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு நாட்டிலுள்ள பொறியியல் நிறுவனங்களை தரவரிசைப்படுத்தியுள்ளது. அதில் தமிழகத்தில் உள்ள டாப் 10 இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை (IIT Madras)
ஐ.ஐ.டி சென்னை தமிழக அளவில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசையில் 89.46 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது.
தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சி (NIT Trichy)
என்.ஐ.டி திருச்சி தமிழக அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மேலும் அகில இந்திய அளவில் 9 ஆவது இடத்தையும், என்.ஐ.டி.,களில் முதலிடத்தையும் பிடித்துள்ளது. என்.ஐ.ஆர்.எஃப் மதிப்பெண் 66.88
வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் (VIT Vellore)
வேலூர் வி.ஐ.டி தமிழக அளவில் 3 ஆம் இடத்தையும், அகில இந்திய அளவில் 11 இடத்தையும் பிடித்துள்ளது. என்.ஐ.ஆர்.எஃப் மதிப்பெண்கள் 66.22
எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRM Chennai)
தமிழக அளவில் 4 ஆம் இடத்தைப் பிடித்துள்ள எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் அகில இந்திய அளவில் 13 ஆவது இடத்தை பிடித்துள்ளது. என்.ஐ.ஆர்.எஃப் மதிப்பெண்கள் 65.41
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் தமிழக அளவில் 5 ஆம் இடத்தையும், அகில இந்திய அளவில் 14 ஆம் இடத்தையும் பிடித்துள்ளது. தேசிய அளவில் மாநில அரசு பல்கலைக்கழகங்களில் அண்ணா பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது. என்.ஐ.ஆர்.எஃப் மதிப்பெண்கள் 65.34
அமிர்த விஸ்வ வித்யாபீடம், கோயம்புத்தூர்
கோயம்புத்தூரில் உள்ள அமிர்த விஸ்வ வித்யாபீடம் தமிழக அளவில் 6 ஆம் இடத்தையும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடத்தையும் பிடித்துள்ளது. என்.ஐ.ஆர்.எஃப் மதிப்பெண்கள் 61.29
கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம், ஸ்ரீவில்லிப்புத்தூர்
கலசலிங்கம் நிறுவனம் தமிழக அளவில் 7 ஆம் இடத்தையும் அகில இந்திய அளவில் 36 ஆம் இடத்தையும் பிடித்துள்ளது. என்.ஐ.ஆர்.எஃப் மதிப்பெண்கள் 58.20
சண்முகா கலை அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தஞ்சாவூர் (SASTRA, Thanjavur)
தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா நிறுவனம் தமிழக அளவில் 8 ஆம் இடத்தையும் அகில இந்திய அளவில் 38 ஆம் இடத்தையும் பிடித்துள்ளது. என்.ஐ.ஆர்.எஃப் மதிப்பெண்கள் 57.97
ஸ்ரீசிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, செங்கல்பட்டு (SSN Chennai)
சென்னையில் உள்ள எஸ்.எஸ்.என் கல்லூரி தமிழக அளவில் 9 ஆம் இடத்தையும் அகில இந்திய அளவில் 46 ஆம் இடத்தையும் பிடித்துள்ளது. என்.ஐ.ஆர்.எஃப் மதிப்பெண்கள் 55.01
சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம், சென்னை
சென்னையில் உள்ள சவீதா நிறுவனம் தமிழக அளவில் 10 ஆம் இடத்தையும் அகில இந்திய அளவில் 53 ஆம் இடத்தையும் பிடித்துள்ளது. என்.ஐ.ஆர்.எஃப் மதிப்பெண்கள் 52.85
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.