/indian-express-tamil/media/media_files/2025/03/15/3QirQkkhe83d3qcBqnZw.jpg)
நடப்பு ஆண்டில் பொறியியல் படிப்பில் சேரலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் அனைவரும் கட்டயம் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய டாப் கல்லூரிகளின் பட்டியல் இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதனை கல்வியாளர் தினேஷ் பிரபு தனது யூடியூப் சேனலில் வழங்கியுள்ளார்.
அந்த வகையில் முக்கியமான சில கல்லூரிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதில் சென்னை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இயங்கி வரும் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. என்.ஐ.ஆர்.எஃப். தரவரிசை, மாணவர்களின் விருப்ப பட்டியல் மற்றும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு போன்றவை அடிப்படையில் இந்த கல்லூரிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதில் முதல் இரண்டு இடங்களை அண்ணா பல்கலைக்கழகம் சி.இ.ஜி கேம்பஸ் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் எம்.ஐ.டி கேம்பஸ் பெறுகின்றன. இங்கு கட்டணமும் குறைவாக வசூலிக்கப்படுகின்றன. இதற்கு அடுத்த இடத்தில் எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரி உள்ளது. மெரிட் அடிப்படையில் இந்தக் கல்லூரியில் சீட் வழங்கப்படுகிறது. இக்கல்லூரியில் படித்தவர்கள் கூகுள் நிறுவனத்தில் கூட வேலை பார்க்கின்றனர்.
அடுத்தபடியாக சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி ஆகியவை இடம்பெறுகின்றன. இந்தக் கல்லூரிகளில் அதிகப்படியான பாடப்பிரிவுகள் உள்ளன. எனவே, கட் ஆஃப் மதிப்பெண் சற்று குறைவாக இருந்தாலும், புதுமையான பாடப்பிரிவுகளை விரும்புபவர்கள் இவற்றை பரிசீலிக்கலாம்.
இதன் தொடர்ச்சியாக ராமாபுரத்தில் உள்ள ஈஸ்வரி பொறியியல் கல்லூரியும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியும் வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் பலர் பெரிய நிறுவனங்களில் வேலை பார்க்கின்றனர். இங்கு மெக்கானிக்கல் மற்றும் மரைன் பாடப்பிரிவுகள் பிரபலமானவை. அடுத்த இடத்தில் சவீதா பொறியியல் கல்லூரி இடம்பெற்றுள்ளது. இந்தக் கல்லூரியில் கட்டணத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கப்படுகிறது.
அடுத்ததாக ஆர்.எம்.கே மற்றும் ஆர்.எம்.டி பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இங்கு ஆய்வு மற்றும் மேற்படிப்புகள் குறித்து முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன. இதேபோல், லொயோலா ஐகேம், செயின்ட் ஜோசப், சாய்ராம், பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மற்றும் பனிமலர் பொறியியல் கல்லூரிகள் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பட்டியலில் பெற்றுள்ளன. இந்தக் கல்லூரிகள் அனைத்தும் சென்னை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
இதேபோல், கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் இருக்கும் சில கல்லூரிகளின் பட்டியலையும் தற்போது பார்க்கலாம். இதில் முதலிடத்தில் பி.எஸ்.ஜி டெக் கல்லூரி இடம்பெற்றுள்ளது. இங்கு செயல்முறை கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக, அரசு உதவி பெறும் கல்லூரியாக இது செயல்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக சி.ஐ.டி கல்லூரி, பி.எஸ்.ஜி ஐ-டெக் ஆகியவை உள்ளன. இங்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் சென்று பார்க்கலாம். அடுத்ததாக, ஜி.சி.டி அரசு பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு ஒட்டுமொத்தமாக ரூ. 12,500-க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இதையடுத்து, மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரி உள்ளது. மதுரையில் பயில வேண்டும் என விரும்பும் மாணவர்கள் இதனை பரிசீலிக்கலாம்.
இந்தப் பட்டியலில் இருக்கும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் ஒரு முறை நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு இருக்கும் வசதிகள் குறித்து அறிந்து கொள்ளலாம். இவை கல்லூரிகளை தேர்வு செய்யும் போது உதவியாக இருக்கும்.
நன்றி - DINESH PRABHU Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.