scorecardresearch

திருச்சி, திருவாரூர், பெரம்பலூர்… 7 மாவட்டங்களில் டாப் பொறியியல் கல்லூரிகள் எவை?

பொறியியல் படிக்க விருப்பமா? திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த 7 மாவட்டங்களில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல் இங்கே

Tamil News
Tamil News Updates

பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களில் பெரும்பாலானோரின் தேர்வு முதலில் சென்னை, அடுத்தது கோவை என்று தான் உள்ளது. சென்னை, கோவையில் உள்ள கல்லூரிகளின் தரம் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவை மாணவர்களை அங்குள்ள கல்லூரிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வைக்கிறது.

அதேநேரம், சென்னை, கோவை தவிர, தமிழகத்தின் பிற பகுதிகளில் தரமான, சிறப்பான, நல்ல வேலைவாய்ப்பை பெற்றுத் தரக்கூடிய ஏராளமான கல்லூரிகள் உள்ளன. அவற்றில் திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த 7 மாவட்டங்களில் உள்ள டாப் என்ஜீனியரிங் கல்லூரிகள் எவை என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

இதையும் படியுங்கள்: அமெரிக்காவில் உயர்கல்வி படிக்க விரும்பும் இந்தியர்கள்; ஜி.ஆர்.இ தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு

கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் தமிழகத்தின் திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த 7 மாவட்டங்களில் உள்ள டாப் பொறியியல் கல்லூரிகள் எவை என பட்டியலிட்டுள்ளார். இதில் திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சியில் உள்ள சாரநாதன் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் முதலிடத்தில் உள்ளது.

2 ஆம் இடத்தில், திருச்சியில் உள்ள கே.ராமகிருஷ்ணன் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.

3 ஆவது இடத்தில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரி உள்ளது.

4 ஆவது இடத்தில் திருச்சியில் உள்ள அண்ணாப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான பாரதிதாசன் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.

5 ஆவது இடத்தில் கே.ராமகிருஷ்ணன் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.

6 ஆவது இடத்தில் திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் டி.ஆர்.பி இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது

7 ஆவது இடத்தில் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள கொங்குநாடு காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.

8 ஆவது இடத்தில் கேர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.

9 ஆவது இடத்தில் ஜெ.ஜெ காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.

10 ஆவது இடத்தில் எம்.ஏ.எம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.

திருவாரூர்

முதலிடத்தில் அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

2 ஆவது இடத்தில் ஏ.ஆர்.ஜெ காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.

பெரம்பலூர்

முதலிடத்தில் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

2 ஆவது இடத்தில் ரோவர் இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

3 ஆவது இடத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் இடத்தில் உள்ளது.

புதுக்கோட்டை

முதலிடத்தில் மவுண்ட் சீயான் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.

2 ஆவது இடத்தில் எம்.என்.எஸ்.கே காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.

3 ஆவது இடத்தில் ஸ்ரீ பாரதி இன்ஜினியரிங் காலேஜ் ஃபார் உமன் உள்ளது.

4 ஆவது இடத்தில் மூகாம்பிகை காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.

நாகப்பட்டினம்

முதலிடத்தில் இ.ஜி.எஸ் பிள்ளை இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

2 ஆவது இடத்தில் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி உள்ளது.

3 ஆவது இடத்தில் சர் ஐசக் நியூட்டன் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.

மயிலாடுதுறை

ஏ.வி.சி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங்

அரியலூர்

முதலிடத்தில் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, அரியலூர் உள்ளது.

2 ஆவது இடத்தில் அரியலூர் இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது. 3 ஆவது இடத்தில் நெல்லை ஆண்டவர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Top engineering colleges list under anna university in trichy

Best of Express