Advertisment

கல்விக்காக மத்திய அரசு வழங்கும் 'டாப் 5' ஸ்காலர்ஷிப்: விண்ணப்பிக்க தயாரா?

உதவித் தொகைக்கான அனைத்துத் தேவைகளுக்கும் ஒரு முனை தீர்வாக தேசிய கல்வி உதவித் தொகைக்கான இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கல்விக்காக மத்திய அரசு வழங்கும் 'டாப் 5' ஸ்காலர்ஷிப்: விண்ணப்பிக்க தயாரா?

படிப்பில் சிறந்து விளங்கும் பொருளாதார பின்தங்கிய மாணவர்களுக்காக இந்திய அரசு பல்வேறு கல்வி உதவித்தொகைத்  திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதில் சிலவற்றை இங்கே காணலாம்.

Advertisment

உதவித் தொகைக்கான அனைத்துத் தேவைகளுக்கும் ஒரு முனை தீர்வாக தேசிய கல்வி உதவித் தொகைக்கான இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. 2 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

 

தொழில்நுட்பம் / தொழிற்கல்வி (Teechincal and Professional Courses) பயிலும் சிறுபான்மை சமுதாய மாணவர் /மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகைத்  திட்டம் (Merit Cum Means Scholarship for Professional and Technical Courses CS Minorities)

சிறுபான்மைச் சமூகத்தில் உள்ள நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவ / மாணவியர்கள் உயர் கல்வி கற்று அதன் மூலம் அவர்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள உதவுவதற்காக இத்திட்டம் துவங்கப்பட்டது.

இசுலாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த மற்றும் பார்சி ஆகிய மத சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த மாணவ / மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் குறைந்தது 50 சதவீதம்  அல்லது அதற்கு சமமான  மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், அவர்கள் நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை பெற வேண்டும் (அ)  நுழைவுத் தேர்வு இல்லாத சேர்க்கை பெற்ற மாணவர்கள்,  12 ஆம் வகுப்புத் தேர்வில்  குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும்.

பெற்றோர்/பாதுகாவலரது ஆண்டு வருமானம் (அனைத்து வழிகளிலும்) ரூ. 2.5  லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்

தேசிய தகுதி கல்வி உதவித்தொகை போர்டல் வழியாக மாணவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

தேசிய அளவிலான தகுதி-வழியுதவி கல்வி உதவித் தொகைத் திட்டம்:

தேசிய அளவிலான தகுதி-வழியுதவி கல்வி உதவித் தொகைத் திட்டம் (National Means-cum-Merit Scholarship Scheme (NMMSS) )2008 மே மாதம் தொடங்கப்பட்டது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சார்ந்த திறமையான மாணவர்கள் எட்டாம் வகுப்புக்குப் பிறகு படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்ற நோக்கில் இத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது.

இத்திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்படுகிற மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000/- என்ற கணக்கில் ஆண்டுக்கு பன்னிரெண்டாம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாநில அரசுப்பள்ளி அல்லது அரசின் உதவி பெறும் பள்ளி அல்லது உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்க இந்த உதவித் தொகை கிடைக்கும். ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் வரை பயன்பெரும் இத்திட்டத்தில் சேர, எட்டாம் வகுப்புத் தேர்வில் 55 சதவீதத்திற்கும் குறையாமல் (ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணவர்களுக்கு 50) மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

 

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மத்திய கல்வி உதவித்தொகை திட்டம் (சி.எஸ்.எஸ்.எஸ்)

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ்  நன்றாக படிக்கும்  பொருளாதார பின் தங்கிய மாணவர்களுக்கு  இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பெற்றோர்/பாதுகாவலரது ஆண்டு வருமானம் (அனைத்து வழிகளிலும்) ரூ. 8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 12 வகுப்பு வாரியத் தேர்வில் மாணவர்கள் குறைந்தபட்சம் 80 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த  உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவில், அங்கீகரிக்கப்பட்ட உயர்க்கல்வி நிறுவனங்களில் பி.டெக் அல்லது எம்.பி.பி.எஸ் போன்ற மேற்படிப்புகளுக்கு இந்த உதவித்தொகை   வழங்கப்படுகிறது.

ஆண்டுக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

AICTE Pragati Scholarship for girls:   

தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில் (AICTE) அங்கீகரித்த  உயர்க்கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்ப டிப்ளோமா/பட்டப் படிப்புகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டம், இளம் பருவ  பெண்களின் திறமை, அறிவு, தன்னம்பிக்கை ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ்,  ஆண்டுக்கு 5,000 மாணவியர்களுக்கு கல்லூரி கட்டணம் மற்றும் பிற படிப்பு தொடர்பான செலவுகளை ஈடுசெய்ய நிதி உதவி வழங்கப்படுகிறது.

பெற்றோர்/பாதுகாவலரது ஆண்டு வருமானம் (அனைத்து வழிகளிலும்) ரூ. 8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேசிய தகுதி கல்வி உதவித்தொகை (National Scholarship Portal) போர்டல் வழியாக  மாணவிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளியிறுதி வகுப்புக்கு முந்தைய கல்வி உதவித் தொகை திட்டம்: (Post-Matric Scholarship for Students with Disabilities )

மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவருக்கும், 9,10,11,12 வகுப்புகளில் படிப்பதற்கும் பின்னர் டிப்ளமோ (பட்டயம்), பட்டம், முதுநிலைப் பட்டம் ஆகியவற்றைப் படிப்பதற்கும் இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாதாந்திர கல்வி உதவித் தொகை, பாட நூல்கள் வாங்குவதற்கான ஊக்கத் தொகை, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித் தொகை நிதி போன்றவைகள் இத்திட்டன் கீழ் கொடுக்கப்படுகின்றன.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Education Scholarship
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment