லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். தீபாவளிக்கு முன்பு நீட் தேர்வு முடிவுகள் நிச்சயம் வெளியாகிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். தற்போது என்டிஏ, நீட் தேர்வு விண்ணப்பப் படிவத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 26 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. அந்த காலக்கெடு முடிவடையும் பட்சத்தில், தேர்வு முடிவு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
தேர்வு முடிவுகள் வெளியானதும், கவுன்சிலிங் பிராசஸ் தொடங்கிவிடும். 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங் மருத்துவ ஆலோசனை குழுவும் (எம்சிசி), 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த மாநில அதிகாரிகள் நீட் கவுன்சிலிங்கை நடத்துகின்றனர்.
நீட் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில், கட்ஆஃப் மார்க்கும், தரவரிசை பட்டியலும் என்டிஏ வெளியிடும். அதன் அடிப்படையில், மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்பார்கள்.
நீட் கவுன்சிலங்கில் பல்வேறு கல்லூரிகள் பங்கேற்பதால், அதில் சிறந்த கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது விண்ணப்பதாரர்களுக்குச் சவாலான பணியாக இருக்கும். அதற்கான விடையை இச்செய்தி தொகுப்பில் காணலாம். மத்திய கல்வித் துறை ஆண்டுதோறும் என்ஐஆர்எஃப் தரவரிசை வெளியிடும். அதன்படி, இந்தாண்டு NIRF தரவரிசையில் இடம்பிடித்த டாப் 10 கல்லூரிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- எய்ம்ஸ் டெல்லி
- முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER) சண்டிகர்
- கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி, வேலூர்
- தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம்( NIMHANS), பெங்களூர்
- சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம், லக்னோ
- அமிர்தா விஷ்வ வித்யாபீடம், கோவை
- பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி
- 8.ஜிம்பர், புதுச்சேரி
- கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரி, லக்னோ
- கஸ்துார்பா மருத்துவக் கல்லூரி, மணிபால்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil