/indian-express-tamil/media/media_files/2025/01/16/j05KNg3IK0ilgkkCipB1.jpg)
அதிக கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் தேர்ந்தெடுத்த தமிழகத்தின் முன்னிலை வகிக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளின் தகவல்கள் குறித்து இதில் பார்க்கலாம். மேனேஜ்மென்ட் கோட்டாவிற்கு திட்டமிட்டு காத்திருக்கும் மாணவர்கள் மற்று பெற்றோருக்கு பயனளிக்கும் விதமாக இவை சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த தகவல்கள் அனைத்தையும் கல்வியாளர் தினேஷ் பிரபு நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
இதன் முதலிடத்தில் சென்னையில் இயங்கி வரும் எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரி இடம்பெற்றுள்ளது. இந்தக் கல்லூரியின் கவுன்சில்ங் கோட் 1315 ஆகும். தனியார் கல்லூரிகள் பட்டியலில் கடந்த ஆண்டு அதிகப்படியான மாணவர்கள் இந்தக் கல்லூரியை தேர்வு செய்துள்ளனர். கடந்த ஆண்டு கவுன்சிலிங்கின் முதல் சுற்றில் இந்தக் கல்லூரியில் 93.11 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.
இதற்கு அடுத்த இடத்தில் சென்னையில் செயல்பட்டு வரும் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி இடம்பெற்றுள்ளது. இந்தக் கல்லூரியின் கவுன்சிலிங் கோட் 1399. கடந்த ஆண்டு கவுன்சிலிங்கின் முதல் சுற்றில் இந்தக் கல்லூரியில் 88.98 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.
மூன்றாவது இடத்தில் கோவையில் இயங்கி வரும் பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி இடம்பெறுகிறது. கடந்த ஆண்டு கவுன்சிலிங்கின் முதல் சுற்றில் இந்தக் கல்லூரியில் 87.14 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.
நான்காவதாக, கோவையில் உள்ள ஸ்ரீ ஈஷ்வர் பொறியியல் கல்லூரி இடம்பெற்றுள்ளது. இதன் கவுன்சிலிங் கோட் 2739 ஆகும். கடந்த ஆண்டு கவுன்சிலிங்கின் முதல் சுற்றில் இந்தக் கல்லூரியில் 71.93 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. கட் ஆஃப் அடிப்படையில் சுமார் 191 முதல் 200 வரை பெற்ற மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.
மேலும், கோவையில் செயல்பட்டு வரும் குமரகுரு பொறியியல் கல்லூரி, தமிழக அளவில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் 5-ஆம் இடத்தில் உள்ளது. இதன் கவுன்சிலிங் கோட் 2712 ஆகும். கடந்த ஆண்டு கவுன்சிலிங்கின் முதல் சுற்றில் இந்தக் கல்லூரியில் 69.54 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.
அடுத்த இடத்தை, கோவையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி பெறுகிறது. இதன் கவுன்சிலிங் கோட் 2718. கடந்த ஆண்டு கவுன்சிலிங்கின் முதல் சுற்றில் இந்தக் கல்லூரியில் 69.17 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.
இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில், ராஜலட்சுமி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி ஆர்.ஐ.டி கேம்பஸ் இடம்பெற்றுள்ளது. இந்தக் கல்லூரியின் கவுன்சிலிங் கோட் 1432 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியில் 188.33 முதல் 196.5 வரை கட் ஆஃப் மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கவுன்சிலிங்கின் முதல் சுற்றில் இந்தக் கல்லூரியில் 67.74 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி அடுத்த இடத்தில் இடம்பெறுகிறது. இந்தக் கல்லூரியின் கவுன்சிலிங் கோட் 1211 ஆகும். கடந்த ஆண்டு கவுன்சிலிங்கின் முதல் சுற்றில் இந்தக் கல்லூரியில் 65.14 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.
கல்லூரிகள் தரவரிசைப் பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பது லொயோலா ஐகம் பொறியியல் கல்லூரி. இந்தக் கல்லூரியின் கவுன்சிலிங் கோட் 1450 ஆகும். கடந்த ஆண்டு கவுன்சிலிங்கின் முதல் சுற்றில் இந்தக் கல்லூரியில் 65.43 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.
இப்பட்டியலில், பத்தாவது இடத்தில் கவுன்சிலிங் கோட் 1216 கொண்ட சவிதா பொறியியல் கல்லூரி இடம்பெற்றுள்ளது. இந்தக் கல்லூரியும் சென்னையில் அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியை 185 முதல் 194.5 வரை கட் ஆஃப் பெற்ற மாணவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.